7 கார், ஒரு மினிடிரக் வைத்துள்ள தவெக வேட்பாளர்.. எதிர்த்து போட்டியிடும் கல்லூரி மாணவி.. வங்கிக்கணக்கில் வெறும் ரூ.1500..
Webdunia Tamil March 31, 2026 04:48 PM

தமிழக சட்டமன்றத் தேர்தல் களம் வேலூர் தொகுதியில் தவெக மற்றும் நாம் தமிழர் கட்சி வேட்பாளர்களின் வேட்புமனு தாக்கலால் சூடுபிடித்துள்ளது.

தமிழக வெற்றி கழகத்தின் வேட்பாளர் வினோத் கண்ணன், தனது குடும்பத்தின் மொத்த சொத்து மதிப்பு சுமார் 2.74 கோடி ரூபாய் என தெரிவித்துள்ளார். ஏழு கார்கள் மற்றும் ஒரு மினி டிரக் வைத்துள்ள இவருக்கு, தொழில் ரீதியாக 1.12 கோடி ரூபாய் கடன் உள்ளது. கல்வி பயிற்சி நிறுவனம் நடத்தி வரும் இவர் மீது இதுவரை எந்த குற்ற வழக்குகளும் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

மறுபுறம், நாம் தமிழர் கட்சி சார்பில் போட்டியிடும் ஆ.சோனியா ஒரு கல்லூரி மாணவி மற்றும் இல்லத்தரசி ஆவார். இவரது கணவர் வாகன ஓட்டுநராக பணிபுரிகிறார். சோனியாவின் பெயரில் 8.57 லட்சம் ரூபாய் மதிப்பிலான அசையும் சொத்துகளும், அவரது கணவர் பெயரில் 20.30 லட்சம் ரூபாய் மதிப்பிலான சொத்துகளும் உள்ளன.

இவருக்கு அசையா சொத்துகள் ஏதுமில்லை என்றும், வங்கிக் கணக்கில் வெறும் 1,500 ரூபாய் மட்டுமே இருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார். எளிய பின்னணி கொண்ட சோனியாவும், தொழிலதிபரான வினோத் கண்ணனும் வேலூர் களத்தில் நேருக்கு நேர் மோதுகின்றனர்.

Edited by Siva

© Copyright @2026 LIDEA. All Rights Reserved.