சொன்னதை மட்டுமில்லை, சொல்லாத திட்டங்களையும் முதல்வர் செய்துள்ளார் - அமைச்சர் கே.ஆர்.பி பெருமிதம் !
அருண் சின்னதுரை March 31, 2026 11:14 PM
கடந்த முறை அளித்த தேர்தல் வாக்குறுதியை மட்டுமல்ல, சொல்லாத பல்வேறு திட்டங்களையும் முதல்வர் ஸ்டாலின் நிறைவேற்றியுள்ளார். ஆதலால் இந்த தேர்தலில் ஸ்டாலின் அவர் அறிவித்துள்ள தேர்தல் வாக்குறுதிகளுக்கு நன்மதிப்பு உண்டு. அதிமுக சார்பில் பழனிச்சாமி அறிவித்துள்ள வாக்குறுதிகள் செல்லாத காசு. - அமைச்சர் கே.ஆர்.பெரிய கருப்பன் பேட்டி. 
 
திருப்பத்தூரில் அமைச்சர் கே.ஆர்.பெரிய கருப்பன் பேட்டி. 
 
சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரியில் திமுக கூட்டணி கட்சி நிர்வாகிகளுடன்,  தேர்தல் பரப்புரை தொடர்பான ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில் கலந்துகொண்ட கூட்டுறவுத்துறை அமைச்சர் செய்தியாளர்களை சந்தித்தபோது...,” சிவகங்கை மாவட்டத்தில் உள்ள நான்கு தொகுதிகளில் வெற்றி பெற வேண்டும் என தளபதி கடுமையான கட்டளை இட்டுள்ளார். ஆதலால், கடந்த முறை வெற்றி வாய்ப்பை இழந்த சிவகங்கை தொகுதியும் சேர்த்து நான்கு தொகுதிகளிலும் உறுதியாக வெற்றி பெறுவோம் என நம்பிக்கை தெரிவித்தார்.
 
சொல்லாத பல்வேறு திட்டங்களையும் நிறைவேற்றியுள்ளார்
 
தொடர்ந்து, கடந்த முறை அளித்த தேர்தல் வாக்குறுதியை மட்டுமல்ல, சொல்லாத பல்வேறு திட்டங்களையும் முதல்வர் ஸ்டாலின் நிறைவேற்றியுள்ளார். ஆதலால் இந்த தேர்தலில் ஸ்டாலின் அவர் அறிவித்துள்ள தேர்தல் வாக்குறுதிகளுக்கு நன்மதிப்பு உண்டு. அதிமுக சார்பில் பழனிச்சாமி அறிவித்துள்ள வாக்குறுதிகள் செல்லாத காசு என்று அமைச்சர் பெரியகருப்பன் விமர்சனம் செய்தார்.
 
© Copyright @2026 LIDEA. All Rights Reserved.