வெர்சே இன்னோவேஷன் இயக்குனர், தணிக்கு குழு தலைவராக பி.ஆர்.ரமேஷ் நியமனம்!..
Webdunia Tamil April 01, 2026 12:48 AM


இந்தியா முழுவதும் பொதுமக்கள் அதிகம் பயன்படுத்தும் டெய்லிஹன்ட் மற்றும் ஜோஷ் போன்ற மொபைல் ஆப்களின் தாய் நிறுவனமான வெர்சோ(Verse) இன்னோவேஷன் தனது நிர்வாக குழுவில் குழுவின் இயக்குனராக பி.ஆர்.ரமேஷை நியமித்திருக்கிறது. அதோடு அவர் தணிக்கை குழு தலைவராகவும் செயல்படுவார் என அறிவிக்கப்பட்டிருக்கிறது. பி.ஆர் ரமேஷ் முன்னணி செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்ப தளமான வெர்சே நிறுவனத்தின் அடுத்த கட்ட வளர்ச்சிக்கு காரணமாக இருப்பார். பி.ஆர் ரமேஷ் அடிப்படையில் ஒரு பட்டயக் கணக்காளர். எனவே நிதி மேற்பார்வை, நிறுவன ஆளுமை, ஒழுங்குமுறை ஆலோசனை, நிர்வாக குழு தலைமை ஆகியவற்றில் 40 வருடங்களுக்கு மேல் அனுபவம் பெற்றவர்..

டெலாய்ட் இந்தியாவின் முன்னாள் தலைவர், டெலாய்ட் சர்வதேச நிர்வாகக் குழுவின் முன்னாள் உறுப்பினர் எனப் பல முக்கிய பொறுப்புகளில் இருந்துள்ளார். இந்திய மற்றும் வெளிநாட்டு நிறுவனங்களுக்கு கவர்னன்ஸ், ரிஸ்க் மேனேஜ்மென்ட், நிதி அறிக்கை, ஒழுங்குமுறை குறித்து ஆலோசனை வழங்கியுள்ளார்.

ஏர் இந்தியா, சிப்லா, நெஸ்ட்லே இந்தியா, லார்சன் & டூப்ரோ, க்ராம்ப்டன் கிரீவ்ஸ், ஐடிசி ஹோட்டல்ஸ், சையன்ட், தேஜஸ் நெட்வொர்க்ஸ், ஹவுசிங் டெவலப்மென்ட் ஃபைனான்ஸ் கார்ப்பரேஷன் உட்படப் பல பட்டியலிடப்பட்ட, பட்டியலிடப்படாத நிறுவனங்களிலும் இவர் பணியாற்றியுள்ளார்.. 2022-23ல் ஆசிய கார்ப்பரேட் கவர்னன்ஸ் மற்றும் நிலைத்தன்மை மையம் இவருக்கு "Best Independent Director" விருதையும் வழங்கியுள்ளது..

இதைத் தாண்டி, இந்தியாவின் ஒழுங்குமுறை, கொள்கை உரையாடல்களிலும் ரமேஷ் முக்கிய பங்காற்றியுள்ளார். செபி, ரிசர்வ் வங்கி, ஐஆர்டிஏ ஆகியவற்றுடன் தொடர்புடைய முக்கியக் குழுக்கள், ஆலோசனை அமைப்புகளில் அவர் பணியாற்றி, கவர்னஸ் மற்றும் நிதித் ரிப்போர்ட்கள் வளர்ச்சிக்குப் பங்களித்துள்ளார்.

இது தொடர்பாக வெர்சே இன்னோவேஷனின் இணை நிறுவனர் உமாங் பேடி கூறுகையில், "வலுவான கவர்னனஸ், நிதி ஒழுக்கம் ஆகிய இரண்டும் தான் காலத்தை வென்று நிற்கும் நிறுவனங்களுக்கு அடிப்படை. நிர்வாகக் குழு, ஒழுங்குமுறைச் சட்டங்கள், உலகளாவிய தணிக்கைத் துறையில் இணையற்ற அனுபவம் கொண்டவர் பி.ஆர். ரமேஷ். வெர்சே இப்போது நிலையான வளர்ச்சிக்கு முக்கியத்துவம் அளிக்கும்போது, அவரது வருகை எங்களைப் பலப்படுத்தும். முதலீட்டாளர்களின் நம்பிக்கையை உறுதிப்படுத்தவும் இது பெரிதும் உதவும்" என்றார்.

பி.ஆர். ரமேஷ்

பி.ஆர். ரமேஷ் தனது நியமனம் குறித்துப் பேசுகையில், "இந்தியாவின் டிஜிட்டல் தளத்தில் கணிசமான பிஸ்னஸ்ஸை வெர்சே உருவாக்கியுள்ளது. வளர்ச்சி வரும்போது அதற்கு இணையாகப் பொறுப்புகளும் வரும். நிர்வாகம், நிதி கட்டுப்பாடுகள், ரிஸ்க் மேனேஜ்மென்ட் ஆகியவை வளர்ச்சியுடன் ஒத்துப்போவதை உறுதிசெய்வது எனது பொறுப்பு. வலுவான நிறுவனங்கள் எப்போதும் இன்னவெஷன், ஒழுக்கம் மற்றும் பொறுப்புடைமை மீது தான் உருவாக்கப்படுகிறது. நிர்வாகக் குழு, மேனேஜ்மென்ட் டீமுடன் இணைந்து பணியாற்ற ஆவலுடன் உள்ளேன்" என்றார்.



வெர்சே இன்னோவேஷனில் தணிக்கைக் குழுவின் தலைவராக ரமேஷ் செயல்படுவார். நிதி அறிக்கை, உள் கட்டுப்பாடுகள், நிறுவன ரிஸ்க் மேனேஜ்மென்ட், தணிக்கைச் செயல்முறைகளை ரமேஷ் மேற்பார்வையிடுவார். இவரது நியமனம், நிறுவனத்தின் செயல்பாட்டு ஒழுங்கு, கவர்னனஸ் கட்டமைப்புகளை வலுப்படுத்த உதவும்.

வெர்சே இன்னோவேஷன்

தொழில்நுட்பம் மூலம் மக்களிடையே உள்ள டிஜிட்டல் இடைவெளியைக் குறைப்பதே வெர்சே இன்னோவேஷனின் முக்கிய நோக்கமாகும். மில்லியன் கணக்கான பயனர்களின் தேவைகளைப் பூர்த்தி செய்யும் சவாலை வெர்சே பூர்த்தி செய்து வருகிறது. செயற்கை நுண்ணறிவு, இயந்திர கற்றல் உள்ளிட்டவை மூலம் யூசர்களுக்கு தேவையான கன்டென்ட்களை வழங்குகிறது.

பல கோடி யூசர்களுக்கு டெய்லிஹன்ட் மூலம் உள்ளூர் மொழிகளில் கன்டென்ட் வழங்கப்படுகிறது. இந்தியாவின் #1 மற்றும் மிகவும் ஈடுபாடு கொண்ட இன்புளுயன்சர் செயலியான ஜோஷ்ஷிற்கும் இதன் தொழில்நுட்பம் வலு சேர்க்கிறது. மேலும், நெக்ஸ்வெர்சே.ஏஐ, டெய்லிஹன்ட் பிரீமியம், ஜோஷின் ஆடியோ அழைப்பு, ஆடியோ கதைகள், வெர்சே கொலாப் போன்ற ஏஐ-சார்ந்த விஷயங்களும் வெர்ஸிடம் உள்ளது. இவை அனைத்தும் சேர்ந்து இந்தியாவின் டிஜிட்டல் பொருளாதாரத்தை மறுவடிவமைக்கின்றன.

முதலீட்டாளர்கள்

இதன் மூலம் வெர்சே இன்னோவேஷன் உள்ளூர் மொழித் தொழில்நுட்பத்திற்கான முதல் 'யூனிகார்ன்' (unicorn) நிறுவனமாகத் திகழ்கிறது. வெர்சே இன்னோவேஷனில் சிபிபி இன்வெஸ்ட்மென்ட்ஸ், ஒன்டாரியோ டீச்சர்ஸ் பென்ஷன் பிளான் (OTPP), கத்தார் இன்வெஸ்ட்மென்ட் அத்தாரிட்டி (QIA), சிகுலர் கஃப், கார்லைல் குரூப், பெய்லி கிஃபோர்ட், கோல்ட்மேன் சாக்ஸ், க்ளேட்புரூக்ஸ், ஃபால்கன் எட்ஜ் கேபிடல், ஆல்ஃபாவேவ், செக்கோயா கேபிடல் இந்தியா, மேட்ரிக்ஸ் பார்ட்னர்ஸ் இந்தியா, கூகிள், மைக்ரோசாஃப்ட், லூபா சிஸ்டம்ஸ், லக்ஸர் குரூப், சோஃபினா, பி கேபிடல் குரூப், ஐஐஎஃப்எல், கோடக், கேட்டமரன், பே கேபிடல், எடெல்வைஸ் மற்றும் ஓமிட்யார் நெட்வொர்க் உள்ளிட்ட பல முன்னணி முதலீட்டாளர்கள் உள்ளனர்.


© Copyright @2026 LIDEA. All Rights Reserved.