#BREAKING தவெக பொதுக்கூட்டத்தில் மதுபாட்டில் விழுந்தது ஏன்?- போலீஸ் விளக்கம்
Top Tamil News April 01, 2026 02:48 AM

வில்லிவாக்கத்தில் நடைபெற்ற தமிழக வெற்றிக் கழகத்தின் பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்ட கழக மகளிர் மீது கண்ணாடி துண்டுகள் மற்றும் பாட்டில்கள் வீசித் தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில் வில்லிவாக்கத்தில் ஆதவ் அர்ஜுனா நடத்திய பொதுக்கூட்டத்தில் மதுபாட்டில் விழுந்த விவகாரம் தொடர்பாக இருவரை போலீஸார் கைது செய்துள்ளனர். பொதுக்கூட்டம் நடைபெறும் இடத்திற்கு அருகே உள்ள லாட்ஜில் மதுபோதையில் இருந்த ரித்திக் மற்றும் அப்புகுட்டி ஆகியோர் சண்டையிட்டுக் கொண்டதாகவும், அப்போது அவர்களுக்குள் மாறி மாறி மதுபாட்டில் வீசிகொண்ட போது தவறுதலாக பொதுக்கூட்டத்தில் மதுபாட்டில் விழுந்ததாகவும்  சென்னை காவல்துறை விளக்கம் அளித்துள்ளனர்.

© Copyright @2026 LIDEA. All Rights Reserved.