ஐபிஎல் தொடரில் விழுந்த மரண அடி.. மும்பை ஹோட்டல் அறையில் சடலமாக மீட்கப்பட்ட முக்கிய புள்ளி.. கேமராவுக்குப் பின்னால் நடந்த அந்தத் துயரம்.. உருக்கமான பின்னணி.. பிசிசிஐ இரங்கல்..!!
SeithiSolai Tamil April 01, 2026 02:48 AM

ஐபிஎல் 2026 தொடர் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், கிரிக்கெட் உலகைத் சோகத்தில் ஆழ்த்தும் ஒரு செய்தி வெளியாகியுள்ளது. பிசிசிஐ-யின் ஒளிபரப்பு குழுவில் தொழில்நுட்ப வல்லுநராகப் பணியாற்றி வந்த பிரிட்டனைச் சேர்ந்த 76 வயதான இயன் வில்லியம்ஸ் லாங்ஃபோர்ட், மும்பையில் உள்ள ஒரு நட்சத்திர ஹோட்டல் அறையில் காலமானார்.

திங்கள்கிழமை காலை நீண்ட நேரமாகியும் அவரது அறை கதவு திறக்கப்படாததால், சந்தேகமடைந்த ஹோட்டல் ஊழியர்கள் போலீசாருடன் இணைந்து கதவை உடைத்து பார்த்தபோது அவர் உயிரிழந்திருந்தது தெரியவந்தது. இவர் மார்ச் 29 அன்று வான்கடே மைதானத்தில் நடைபெற்ற மும்பை இந்தியன்ஸ் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் இடையிலான போட்டியின் போது தனது பணியில் ஈடுபட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

இயன் வில்லியம்ஸ் லாங்ஃபோர்ட் ஒரு தொழில்முறை கிரிக்கெட் வீரர் அல்ல என்றாலும், நேரலை ஒளிபரப்பு மற்றும் சிக்னல் டிரான்ஸ்மிஷன் போன்ற சிக்கலான தொழில்நுட்பப் பணிகளில் பல தசாப்தங்களாக நிபுணத்துவம் பெற்றவர். சர்வதேச அளவில் கிரிக்கெட் போட்டிகளை உலகம் முழுவதும் உள்ள ரசிகர்களின் திரைக்குக் கொண்டு செல்வதில் இவர் முக்கிய பங்காற்றியுள்ளார்.

இவரது மறைவு இயற்கை மரணமாக இருக்கலாம் என்று முதற்கட்ட விசாரணையில் கருதப்பட்டாலும், பிரேதப் பரிசோதனை அறிக்கைக்காக போலீசார் காத்திருக்கின்றனர். ஐபிஎல் தொடரின் பிரம்மாண்டத்திற்குப் பின்னால் கேமராக்களுக்குப் பின்னால் நின்று உழைக்கும் ஒரு மிகச்சிறந்த வல்லுநரை இழந்திருப்பதாக பிசிசிஐ மற்றும் கிரிக்கெட் உலகம் தனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்து வருகிறது.

 

 

© Copyright @2026 LIDEA. All Rights Reserved.