ஈரான் அணு ஆயுதம் உற்பத்தி செய்யக்கூடது எனக்கூறி அந்நாட்டின் மீது அமெரிக்காவும், இஸ்ரேலும் துவங்கிய போர் ஒரு மாதம் முடிந்தும் நின்றபாடில்லை.. இஸ்ரேலும், அமெரிக்காவும் தாக்குதலில் ஈரானில் பல பகுதிகள் சேதமடைந்துள்ளன. அதேநேரம் திருப்பி தாக்க துவங்கிய ஈரான் அமெரிக்க ராணுவ தடவாளங்கள் அமைந்திருக்கும் வளைகுடா நாடுகளான துபாய், சவுதி அரேபியா, பஹ்ரைன், அபுதாபி போன்ற நாடுகளை தாக்கி வருகிறது..
இந்த போர் காரணமாக இந்தியாவில் உள்ள பல நாடுகளுக்கும் கச்சா எண்ணெய் செல்வது தடைப்பட்டிருக்கிறது.. ஏனெனில், ஈரானின் ஹார்முஸ் நீரிணை வழியாகத்தான் எண்ணெய் கப்பல்கள் செல்கிறது. ஆனால் ஈரான் அதை தடுக்கிறது.. நட்பு நாடுகளை தவிர அமெரிக்கா, இஸ்ரேல் உள்ளிட்ட நாடுகளின் எண்ணெய் கப்பல் அந்த வழியாக சென்றால் அந்த கப்பல்கள் மீது ஈரான் தாக்குதல் நடத்துகிறது..
அதன் காரணமாக இந்தியாவில் பல மாநிலங்களிலும் சமையல் சிலிண்டர் தட்டுப்பாடு ஏற்பட்டு ஹோட்டல்களில் உணவுகளின் விலை உயர்த்தப்பட்டிருக்கிறது.. பல உணவகங்கள் மூடப்பட்டிருக்கிறது..சில மாநிலங்களில் பெட்ரோல் விலையும் உயர்ந்திருக்கிறது.
இந்நிலையில், இன்று செய்தியாளர்களை சந்தித்த அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் ‘ஹோர்முஸ் நீரிணையை வழியாக கச்சா எண்ணெய் வாங்கும் நாடுகளுக்கு நாங்கள் சொல்லுவது இரண்டு விஷயம்.. முதலாவது எங்களிடம் நிறைய கச்சா எண்ணெய் இருக்கிறது.. நீங்கள் வாங்கிக்கொள்ளலாம்.. இரண்டாவது தைரியத்தை வரவழைத்துக் கொண்டு சென்று ஹோர்முஸ் நீரிணையை கைப்பற்றுங்கள்.. உங்களுக்கு உதவி செய்தற்காக இனிமேலும் அமெரிக்கா அங்கே இருக்காது’ எனக் கூறியிருக்கிறார்..