விளாத்திகுளம் மாணவி கொலை வழக்கு: முனீஸ்வரனுக்கு எதிரான மனு விரைவில் விசாரணைக்கு வருகிறது !
அருண் சின்னதுரை April 01, 2026 02:14 AM
விளாத்திகுளம் மாணவி கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட முனீஸ்வரன் தொடர்பான மூதாட்டி கொலை வழக்கில் தங்களையும் சேர்க்க கோரி விளாத்திகுளம் மாணவியின் பெற்றோர் உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் மனுத்தாக்கல் விரைவில் விசாரணைக்கு வர உள்ளது.
 
விளாத்திகுளம் பகுதியில் பாலியல் வன்கொடுமை
 
தூத்துக்குடியைச் சேர்ந்த குடும்பத்தினர் உயர்நீதிமன்ற மதுரை மனுவினைத் தாக்கல் செய்துள்ளனர். அதில், "விளாத்திகுளம் பகுதியில் பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்யப்பட்ட 12 ஆம் வகுப்பு சிறுமி எனது மகள். பொருளாதார ரீதியாக பின் தங்கிய குடும்பத்தைச் சேர்ந்த எங்கள் வீட்டில் தனி கழிப்பறையை அமைத்துக் கொள்ளும் வசதி இல்லை உயிரிழந்த எனது நன்கு படிப்பவர். 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதிக் கொண்டிருந்த சூழலில் கடந்த 10ஆம் தேதி மாலை 6 மணி அளவில் அருகில் உள்ள சீமை கருவேல தோப்பிற்கு இயற்கை உபாதை கழிப்பதற்காக சென்றிருந்தார். அவர் வீடு திரும்பாததால் முதலில் குளத்தூர் காவல் நிலையத்தை அணுகினோம்.
 
பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டிருந்தார்
 
அவர்கள் எங்களை மிகவும் இழிவான வார்த்தைகளால் பேசியதுடன், குழந்தையை கண்டிபிடிக்க நடவடிக்கையை எடுக்காமல், விளாத்திகுளம் அனைத்து மகளிர் காவல் நிலையத்திற்கு செல்லுமாறு திருப்பி அனுப்பினர். விளாத்திகுளம் காவல் நிலையத்திலும் வழக்கை பதிவு செய்யாமல் மீண்டும் குளத்தூர் காவல் நிலையத்திற்கு அனுப்பினார்கள். இதற்கிடையே எங்கள் உறவினர்கள் எனது மகளை இறந்த நிலையில் கண்டுபிடித்தனர். அவர் கொடூரமான முறையில் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டிருந்தார். பிறர் இது தொடர்பாக தர்மமுனீஸ்வரன் என்பவனை காவல்துறையினர் கைது செய்தனர். ஏற்கனவே மூதாட்டி  பாலியல் வன்கொடுமை வழக்கில் விதிக்கப்பட்ட தண்டனையை உயர்நீதிமன்ற மதுரை அமர்வு கடந்த ஆண்டு நிறுத்தி வைத்ததோடு, ஜாமின் வழங்கி உத்தரவிட்டிருந்தது. அந்த உத்தரவின் அடிப்படையில் வெளியே இருந்த போது தான் எங்களது மகளை பாலியல் வன்கொடுமை செய்திருக்கிறார். ஆகவே, மூதாட்டி கொலை வழக்கிலும் எங்களை எதிர் மனுதாரராக இணைத்தும், முனீஸ்வரனுக்கு வழங்கப்பட்ட தண்டனையை நிறுத்தி வைத்து ஜாமின் வழங்கி உத்தரவை ரத்து செய்தும் உத்தரவிட வேண்டும்" என கூறியுள்ளனர். இந்த மனு விரைவில் விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது
© Copyright @2026 LIDEA. All Rights Reserved.