தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் வரும் ஏப்ரல் 23-ஆம் தேதி ஒரே கட்டமாக நடைபெற்று, மே மாதம் 04 -ஆம் தேதி வாக்குகள் எண்ணப்பட்டு அதே நாளில் முடிவுகளும் அறிவிக்கப்படவுள்ளது.
இதற்காக அரசியல் கட்சியால் அணைத்து வேட்பாளர்கள் பட்டியலை வெளியிட்டு வருகின்றதோடு, தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில், தமிழக முதல்வர் மற்றும் திமுக தலைவர் வரும் ஏப்ரல் 03-ஆம் தேதி நண்பகல் 12 மணிக்கு காணொளி மூலம் அனைத்து தொகுதி திமுக நிர்வாகிகளுடன் கலந்துரையாட உள்ளார்.
இதன் போது மாவட்டச் செயலாளர்கள், வேட்பாளர்கள், நிர்வாகிகள் அனைவரும் தவறாமல் பங்கேற்க வேண்டும் திமுக வலியுறுத்தியுள்ளது. ஒவ்வொரு தொகுதி அளவில் தக்க ஏற்பாடுகளைச் செய்ய மாவட்டச் செயலாளர்களுக்கு திமுக அறிவுறுத்தியுள்ளது.