“பேன் கார்டு முதல் பி.எஃப் வரை” ஏப்ரல் – 1 இன்று முதல் மாறப்போகும் விதிமுறைகள்…. எதற்கெல்லாம் கூடுதல் கட்டணம்….? வெளியான தகவல்….!!
SeithiSolai Tamil April 01, 2026 08:48 AM

இந்த நிதியாண்டு ஏப்ரல் 1 முதல் வெறும் ‘ஃபூல்ஸ் டே’ மட்டுமல்ல, இந்தியர்களுக்கு ‘ரூல்ஸ் டே’வாகவும் மாறியுள்ளது. வருமான வரி முதல் ரயில் டிக்கெட் வரை பல அதிரடி மாற்றங்கள் இன்று முதல் அமலுக்கு வந்துள்ளன. குறிப்பாக, புதிய வருமான வரி சட்டத்தின் கீழ் ரூ. 12.75 லட்சம் வரை வருமானம் உள்ளவர்கள் வரி செலுத்த தேவையில்லை என்பது மிகப்பெரிய நிம்மதி.

ஆனால், ஊழியர்களின் கையில் கிடைக்கும் சம்பளம் (Take-home salary) குறைய வாய்ப்புள்ளது; ஏனெனில் புதிய விதிகளின்படி அடிப்படை ஊதியம் 50% ஆக இருக்க வேண்டும், இதனால் பி.எஃப் பிடித்தம் அதிகரிக்கும். அதேபோல், பேன் (PAN) கார்டு பெற இனி ஆதார் மட்டும் போதாது, கூடுதல் ஆவணங்கள் அவசியம்.

ரயில் பயணிகளுக்கு ஒரு ஷாக் நியூஸ் என்னவென்றால், இனி ரயில் கிளம்புவதற்கு 8 மணி நேரத்திற்கு முன்னதாக டிக்கெட்டை ரத்து செய்தால் ஒரு பைசா கூட ரீஃபண்ட் கிடைக்காது. வங்கி ஏடிஎம் பரிவர்த்தனைகளிலும் கட்டணங்கள் உயர்த்தப்பட்டுள்ளன.

விண்வெளி மற்றும் பாதுகாப்பு ரீதியாகப் பார்த்தால், ‘ஆபரேஷன் ககார்’ மூலம் இந்தியா ‘நக்சல் இல்லாத தேசம்’ என்ற இலக்கை எட்டியுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. காஸ் விலை, கிரெடிட் கார்டு ரிவார்டு பாயிண்ட்ஸ் குறைப்பு என சாமானியர்களின் அன்றாடச் செலவுகளில் இந்த ஏப்ரல் 1 நேரடி பாதிப்பை ஏற்படுத்தப் போகிறது.

© Copyright @2026 LIDEA. All Rights Reserved.