தவெக தொண்டர்கள் உற்சாகம்..! நாளை திருச்சியில் விஜய் மனுத் தாக்கல்; பிரசாரத்திற்கும் காவல்துறை அனுமதி..!
Top Tamil News April 01, 2026 09:48 AM

சென்னை பெரம்பூர் தொகுதியில் தனது வேட்புமனுவைத் தாக்கல் செய்த விஜய், அதனைத் தொடர்ந்து அந்தத் தொகுதியில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். பெரம்பூரைத் தொடர்ந்து, தனது அடுத்த கட்டமாக நாளை மறுநாள் (ஏப்.2-ல்) திருச்சி கிழக்கு தொகுதியில் விஜய் வேட்புமனுத் தாக்கல் செய்யவுள்ளார். மனுத் தாக்கலைத் தொடர்ந்து திருச்சியில் அவர் பிரம்மாண்ட பிரச்சாரத்தில் ஈடுபடவும் திட்டமிட்டுள்ளார்.

விஜய்யின் திருச்சி பிரச்சாரத்திற்காகப் பாதுகாப்பு மற்றும் அனுமதி கோரி திருச்சி மாநகர காவல் ஆணையரிடம் தவெக சார்பில் மனு அளிக்கப்பட்டிருந்தது. பெரம்பூர் பிரச்சாரத்தில் பாதுகாப்பு குறைபாடுகள் இருப்பதாகப் புகார் எழுந்த நிலையில், தற்போது திருச்சி பிரச்சாரத்திற்கு மாநகர காவல்துறை அதிகாரப்பூர்வமாக அனுமதி வழங்கியுள்ளது.

2026 தமிழக சட்டமன்றத் தேர்தலுக்கான முக்கிய தேதிகள் ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளன. வாக்குப்பதிவு நாள்: ஏப்ரல் 23, 2026, வாக்கு எண்ணிக்கை: மே 4, 2026, திருச்சியில் காவல்துறையின் அனுமதி கிடைத்துள்ளதால், தமிழக வெற்றிக் கழகத் தொண்டர்கள் மிகுந்த உற்சாகத்துடன் பிரச்சார ஏற்பாடுகளைச் செய்து வருகின்றனர்.

© Copyright @2026 LIDEA. All Rights Reserved.