நாட்டின் பெரும் பணக்கார குடும்பமான அம்பானி வீட்டு விசேஷங்கள் என்றாலே ஆடம்பரத்திற்குப் பஞ்சம் இருக்காது. அந்த வகையில், கடந்த மார்ச் 29 அன்று மும்பை இந்தியன்ஸ் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகளுக்கு இடையிலான ஐபிஎல் போட்டியைப் பார்க்க வந்திருந்த அம்பானி வீட்டு இளைய மருமகள் ராதிகா மெர்ச்சன்ட், தனது கையில் கட்டியிருந்த கடிகாரத்தால் ஒட்டுமொத்த தேசத்தையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளார்.
அவர் அணிந்திருந்த ‘ரிச்சர்ட் மில்’ (Richard Mille RM 75-01) ரக கடிகாரத்தின் விலை மட்டும் இந்திய மதிப்பில் சுமார் 21 கோடியே 39 லட்சம் ரூபாய் எனத் தெரியவந்துள்ளது. இந்த ஒரு வாட்ச் விலையை வைத்துப் பார்த்தால், ஐபிஎல் ஏலத்தில் ஒரு டஜன் வீரர்களையே வாங்கிவிடலாம் போலிருக்கிறது.
இந்தக் கடிகாரம் ஏன் இவ்வளவு விலை தெரியுமா பாஸ்? உலகம் முழுவதிலுமே வெறும் 10 நபர்களிடம் மட்டுமே இந்த ஸ்பெஷல் வாட்ச் இருக்கிறது. இதன் வெளிப்புறக் கூட்டை (Case) உருவாக்க மட்டுமே 40 நாட்கள் ஆகுமாம்; அதேபோல் அதன் உட்புற இயந்திர வேலைகளுக்கு (Machining) ஒரு 40 நாட்கள் என மிக நுணுக்கமாகத் தயாரிக்கப்பட்டுள்ளது.
ஒரு ஐபிஎல் போட்டியின் போது சாதாரணமாகக் கையில் கட்டிக்கொண்டு வந்த வாட்ச் இவ்வளவு கோடி பெறுமானமானது என்பதுதான் இப்போது சமூக வலைதளங்களில் ஹாட் டாபிக். அம்பானி வீட்டு மருமகள் என்றால் சும்மாவா!