பாதுகாப்பு நெறிமுறைகளை மீறிய பாக். வீரர்; அனுமதியின்றி நண்பர்களை ஓட்டலுக்கு அழைத்து வந்தால் அபராதம்..!
Seithipunal Tamil April 01, 2026 06:48 AM

பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஷாஹீன் அஃப்ரிடி. இவர் பி.எஸ்.எல். தொடரில் லாகூர் கலாண்டர்ஸ் அணியின் கேப்டனுமான செயல்படுகிறார். இவர் கிரிக்கெட் வீரர்கள் தங்கியிருக்கும் விடுதிகள் மற்றும் மைதானங்களில் கடைபிடிக்கப்பட வேண்டிய பாதுகாப்பு நெறிமுறைகளை மீறியதாக கூறி அவருக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தின் விதிமுறைகளின்படி, வீரர்கள் தங்கியிருக்கும் ஓட்டல் தளங்களுக்கு வெளிநபர்கள் வருவதற்கு மிகக் கடுமையான கட்டுப்பாடுகள் உள்ளன. அதாவது, வீரர்களின் பாதுகாப்பு மற்றும் ஒழுக்கத்தைக் கருத்தில் கொண்டு இந்த விதிகள் வகுக்கப்பட்டுள்ளன. ஆனால், பி.எஸ்.எல் தொடரின் போது ஷாஹீன் அஃப்ரிடி, உரிய அதிகாரிகளிடம் எந்தவிதமான முன்னனுமதியும் பெறாமல், நான்கு நபர்களைத் தான் தங்கியிருந்த ஓட்டல் தளத்திற்கு அழைத்து வந்ததாகக் கண்டறியப்பட்டுள்ளது.

இது குறித்து விசாரணை நடத்திய பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம், வீரர்களின் பாதுகாப்பு வளையத்திற்குள் அனுமதியின்றி நபர்களை அனுமதித்தது மிகப்பெரிய தவறும் என்றும், அணியின் கேப்டனாக இருந்து கொண்டு மற்ற வீரர்களுக்கு முன்னுதாரணமாக இருக்க வேண்டிய ஒரு வீரர், இத்தகைய பாதுகாப்பு குறைபாட்டிற்கு காரணமாக இருந்தது வாரியத்தை அதிருப்தி அடையச் செய்தது. இதன் விளைவாக, அவருக்கு 1,000 அமெரிக்க டாலர்கள் (சுமார் 03 லட்சம் பாகிஸ்தான் ரூபாய்) அபராதமாக விதிக்கப்பட்டுள்ளது.

ஏனெனெனில், பாகிஸ்தானில் சர்வதேச வீரர்கள் பங்கேற்கும் தொடர்களின் போது பாதுகாப்பு என்பது மிக முக்கியமான அம்சமாகப் பார்க்கப்படுகிறது. இத்தகைய சூழலில், நட்சத்திர வீரர்கள் விதிகளை மீறுவது தொடரின் நற்பெயருக்குக் களங்கம் விளைவிக்கும் என்பதால், பி.சி.பி இந்த முடிவை எடுத்துள்ளது.

© Copyright @2026 LIDEA. All Rights Reserved.