போர் முடிந்துவிட்டது, படைகள் வெளியேறும்: டிரம்ப்.. போர் முடியவில்லை, தாக்குதல் தொடரும்: நெதன்யாகு
Webdunia Tamil April 01, 2026 02:48 PM

ஈரான் போஎ குறித்து அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் மற்றும் இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு ஆகியோரிடையே மாறுபட்ட கருத்துக்கள் நிலவி வருகின்றன.

ஈரானுடன் எந்தவித ஒப்பந்தமும் இல்லாமலேயே, இன்னும் இரண்டு அல்லது மூன்று வாரங்களில் அமெரிக்க படைகள் அங்கிருந்து வெளியேறும் என்று ட்ரம்ப் அதிரடியாக அறிவித்துள்ளார். அமைதி பேச்சுவார்த்தை என்பது அமெரிக்காவின் வெளியேற்றத்திற்கு ஒரு நிபந்தனை அல்ல என்றும் அவர் தெளிவுபடுத்தியுள்ளார்.

மறுபுறம், இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு இந்த முடிவை ஏற்கவில்லை. ஈரானின் பயங்கரவாத ஆட்சியை வேரறுக்கும் வரை இஸ்ரேலின் ராணுவ நடவடிக்கைகள் தொடரும் என்றும், போர் இன்னும் முடிவுக்கு வரவில்லை என்றும் அவர் சூளுரைத்துள்ளார்.

பிப்ரவரி 28 அன்று தொடங்கிய இந்த போரில் ஈரானின் உயர்மட்டத் தலைவர்கள் கொல்லப்பட்ட நிலையில், மத்திய கிழக்கின் வரைபடத்தையே மாற்றிவிட்டதாக நெதன்யாகு உரிமை கோருகிறார். இருப்பினும், கூட்டணி நாடுகளின் ஆதரவு குறைந்து வருவதால் ட்ரம்ப் அதிருப்தியில் உள்ளார்.

அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் இடையேயான இந்த முரண்பாடு சர்வதேச அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


Edited by Siva

© Copyright @2026 LIDEA. All Rights Reserved.