ஆந்திர மாநில அரசு நெசவுத் தொழிலை ஊக்குவிக்கும் வகையில், நெசவாளர்களுக்கான அதிரடியான இலவச மின்சாரத் திட்டத்தை இன்று ஏப். 1 முதல் அதிகாரப்பூர்வமாக நடைமுறைக்குக் கொண்டு வந்துள்ளது. இத்திட்டத்தின்படி, கைத்தறி நெசவாளர்களுக்கு மாதம் 200 யூனிட் வரையிலும், விசைத்தறி உரிமையாளர்களுக்கு 500 யூனிட் வரையிலும் மின்சாரம் முற்றிலும் இலவசமாக வழங்கப்பட உள்ளது. மின்சாரக் கட்டணச் சுமையைக் குறைத்து நலிவடைந்த நிலையில் உள்ள நெசவுத் தொழிலுக்குப் புத்துயிர் அளிப்பதே இந்த முன்னோடித் திட்டத்தின் முக்கிய நோக்கம் என அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த புதிய அறிவிப்பின் மூலம் சுமார் ஒரு லட்சம் கைத்தறி நெசவாளர் குடும்பங்களும், 11,488 விசைத்தறி இயந்திரங்களும் நேரடிப் பயன் அடைய உள்ளன. இதன்படி, தகுதியுள்ள ஒரு கைத்தறி நெசவாளர் குடும்பம் ஆண்டுக்கு சுமார் 8,640 ரூபாய் வரையிலும், விசைத்தறி இயக்குபவர்கள் ஆண்டுதோறும் 21,600 ரூபாய் வரையிலும் மின்கட்டணத்தைச் சேமிக்க முடியும். இந்தத் திட்டத்தைச் செயல்படுத்துவதற்காக ஆண்டுக்குச் சுமார் 150 கோடி ரூபாய் நிதியை அரசு ஒதுக்கியுள்ளது, நெசவுத் தொழிலாளர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.

இலவச மின்சாரம் மட்டுமின்றி, நெசவாளர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த ஓய்வூதியத் தொகையை மாதம் 4,000 ரூபாயாக அரசு உயர்த்தியுள்ளது. மேலும், நெசவாளர் கூட்டுறவு சங்கங்களுக்கான சேமிப்பு நிதியாக 5 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளதுடன், நவீன நெசவு இயந்திரங்களை வாங்குவதற்கு 90 சதவீதம் வரை மானியம் வழங்கவும் அரசு முன்வந்துள்ளது. அரசின் இந்த அதிரடிச் சலுகைகளால் நெசவுத் தொழில் அடுத்தகட்டத்திற்குச் செல்லும் என்றும், இடைத்தரகர்களின் தலையீடு இன்றி நெசவாளர்கள் நேரடியாகப் பயன்பெறுவார்கள் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!
உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!