ஆப்பிள், கூகுள், மெட்டா, டெஸ்லா நிறுவனங்களை தாக்க போகிறோம்.. ஊழியர்கள் வெளியேறவும்: ஈரான் எச்சரிக்கை..!
Webdunia Tamil April 01, 2026 02:48 PM

ஈரானிய புரட்சிகர பாதுகாப்புப் படை அமெரிக்காவின் முன்னணி தொழில்நுட்ப நிறுவனங்கள் மீது தாக்குதல் நடத்தப்போவதாக விடுத்துள்ள எச்சரிக்கை உலகளவில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஆப்பிள், கூகுள், மெட்டா, டெஸ்லா மற்றும் போயிங் உள்ளிட்ட 18 நிறுவனங்களை இலக்கு வைத்து ஏப்ரல் 1 முதல் தாக்குதல்கள் தொடங்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

ஈரானிய தலைவர்களின் படுகொலைகளுக்கு இந்த நிறுவனங்கள் உடந்தையாக இருப்பதாக ஈரான் குற்றம் சாட்டியுள்ளது. குறிப்பாக, பிப்ரவரி 28 அன்று தொடங்கிய போரில் ஈரானின் உயர்மட்ட தலைவர்கள் கொல்லப்பட்டதற்கு இந்த நிறுவனங்களின் தொழில்நுட்பங்களே முக்கிய காரணம் என்று ஈரான் கருதுகிறது. இதனால், இந்த நிறுவனங்களை பயங்கரவாத நிறுவனங்கள் என்று ஈரான் முத்திரை குத்தியுள்ளது.

தாக்குதலுக்கு முன்னெச்சரிக்கையாக, அந்தந்த நிறுவனங்களின் ஊழியர்கள் உடனடியாக வெளியேறுமாறும், ஒரு கிலோமீட்டர் சுற்றளவில் வசிக்கும் பொதுமக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறும் ஈரான் அறிவுறுத்தியுள்ளது.

அதிபர் ட்ரம்ப் ஒருபுறம் அமைதி பேச்சுவார்த்தை பற்றி பேசினாலும், மறுபுறம் அமெரிக்க-இஸ்ரேல் கூட்டணி ஈரானிய தலைவர்களை தொடர்ந்து குறிவைத்து வருவது குறிப்பிடத்தக்கது.

Edited by Siva

© Copyright @2026 LIDEA. All Rights Reserved.