பல்லடத்தில் பரபரப்பு! - தொண்டரின் கழுத்தில் இருந்த விசிலைப் பிடுங்கி வீசிய அதிமுக நிர்வாகி..!
Top Tamil News April 01, 2026 05:48 PM

திருப்பூர் அருகே, வேட்பாளர் அறிமுக நிகழ்ச்சியில், அதிமுக நிர்வாகி ஒருவர், விசிலை பிடுங்கி தூக்கி வீசிய காட்சி சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.

திருப்பூர் மாவட்டம் பல்லடம் அடுத்த மங்கலத்தில் நடைபெற்ற அதிமுக வேட்பாளர் அறிமுக கூட்டத்தில், 

மேளதாளம் வாசிப்பவர் விசில் ஒன்றை கழுத்தில் அணிந்திருந்த நிலையில், அதனைக்கண்டு அதிர்ச்சியடைந்த அதிமுக நிர்வாகி மகேந்திரகுமார் அந்த விசிலை பிடுங்கி தூக்கி வீசினார்.

இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த நிகழ்வில் ஆயிரக்கணக்கான அதிமுக நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் கலந்துகொண்டனர்.


 

© Copyright @2026 LIDEA. All Rights Reserved.