திமுக கூடுதல் தொகுதி ஒதுக்கவில்லை- வேல்முருகன்
Top Tamil News April 02, 2026 01:48 AM

திமுக எங்களுக்கு கூடுதல் தொகுதி ஒதுக்கவில்லை என தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன் தெரிவித்துள்ளார்.


சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய வேல்முருகன், “தமிழக வாழ்வுரிமை கட்சி தலைமையில் 35 கட்சிகள், 50 அமைப்புகள் சேர்ந்து தேர்தலை சந்திக்க முடிவு செய்துள்ளோம். எங்களைப் போல வளர்ந்து வருபவர்களுக்கு வாய்ப்பு கொடுக்க வேண்டும். திமுக எங்களுக்கு கூடுதல் தொகுதி ஒதுக்கவில்லை. கேமரா சின்னம் ஒதுக்கிய ஆணையத்துக்கு நன்றி. எங்கள் கட்சியின் உயர்நிலைக் குழு கூடி முக்கிய முடிவுகள் எடுக்கவுள்ளோம். தேர்தலில் நான் போட்டியிடுவதை கட்சி தீர்மானிக்கும்” என்றார்.

© Copyright @2026 LIDEA. All Rights Reserved.