IPL 2026: இம்பாக்ட் பிளேயராக வந்து கெத்து.. டெல்லி அணியின் வெற்றிக்கு உதவிய ரிஸ்வி..!
TV9 Tamil News April 02, 2026 03:48 AM

ஐபிஎல் 2026 சீசனின் (IPL 2026) 5வது போட்டியில் ரிஷப் பண்ட் தலைமையிலான லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியை (Lucknow Super Giants) அக்ஸர் படேல் தலைமையிலான டெல்லி கேபிடல்ஸ் அணி 6 விக்கெட்கள் வித்தியாசத்தில் 142 ரன்களை துரத்தி வெற்றி பெற்றது. டெல்லி கேபிடல்ஸ் அணியின் வெற்றிக்கு இம்பாக்ட் பிளேயராக உள்ளே வந்த சமீர் ரிஸ்வி மற்றும் டிரிஸ்டன் ஸ்டப்ஸ் ஆகியோர் முக்கியப் பங்காற்றினர். இவர்கள் இருவரும் இணைந்து ஐந்தாவது விக்கெட்டுக்கு 76 பந்துகளில் 119* ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தனர். சமீர் ரிஸ்வி 47 பந்துகளில் 5 பவுண்டரிகள் மற்றும் 4 சிக்ஸர்களின் உதவியுடன் 70* ரன்கள் குவித்து, அணிக்காக மிகப்பெரிய இன்னிங்ஸை ஆடினார். இந்த நேரத்தில், பிரின்ஸ் யாதவ் லக்னோ அணிக்காக அதிகபட்சமாக 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

ALSO READ: எனக்கு கிரிக்கெட்டில் நண்பர்கள் இல்லை.. தனிப்பட்ட வாழ்க்கை குறித்து பேசிய அர்ஜூன் டெண்டுல்கர்!

பந்துவீச்சில் அசத்திய நடராஜன்:

First wicket in 💙❤️ for our Nattu 🫡 pic.twitter.com/WM3YifPjZu

— Delhi Capitals (@DelhiCapitals)

டாஸ் வென்ற டெல்லி பந்துவீச்சைத் தீர்மானித்தது. முதலில் பேட்டிங் செய்த லக்னோ அணி, 18.4 ஓவர்களில் 141 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. அப்துல் சமத் 25 பந்துகளில் 36 ரன்கள் எடுத்து அணியின் அதிகபட்ச ஸ்கோரை பதிவு செய்தார். லுங்கி நிடிகி மற்றும் டி நடராஜன் ஆகியோர் டெல்லி அணிக்காக தலா மூன்று விக்கெட்டுகளை வீழ்த்தினர்.

டெல்லி தொடக்கத்தில் விக்கெட்களை இழந்து தருமாற்றம்:

Clutch. Impact. Sam. 🤝💪 pic.twitter.com/mCkNgeuhYm

— Delhi Capitals (@DelhiCapitals)


இலக்கை விரட்டிய டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி ஆரம்பத்தில் தடுமாறியது. பவர்பிளேயில் 4 விக்கெட் இழப்பிற்கு வெறும் 33 ரன்களை மட்டுமே இழந்தது. இந்தக் காலகட்டத்தில், கே.எல். ராகுல் (0), நிதிஷ் ராணா (15), பதும் நிசங்கா (0) மற்றும் அக்சர் படேல் (0) ஆகியோரின் விக்கெட்டுகளை இழந்தது. அதன்பிறகு, வெற்றி பெறுவது சாத்தியமற்றதாகத் தோன்றியது.

ALSO READ:IPL 2026: ராசியில்லாமல் ரன் அவுட்.. 7 ரன்களில் லாக்காகி வெளியேறிய ரிஷப் பண்ட்!

அடுத்தடுத்து 4 விக்கெட்டுகளை இழந்த பிறகு, சமீர் ரிஸ்வியும் டிரிஸ்டன் ஸ்டப்ஸும் 5வது விக்கெட்டுக்குக் கூட்டணி அமைத்தனர். இருவரும் இணைந்து ஆட்டத்தை நிலைப்படுத்தினர். ஆட்டம் முன்னேற முன்னேற, அவர்கள் தங்களது ஆட்ட வேகத்தை அதிகரித்து, படிப்படியாக அணியை வெற்றிக்கு வழிநடத்தினர்.

லக்னோ பந்துவீச்சு:

லக்னோ அணிக்காக பிரின்ஸ் யாதவ் தனது 3 ஓவர்களில் 20 ரன்கள் மட்டுமே கொடுத்து அதிக விக்கெட்டுகளை வீழ்த்தினார். முகமது ஷமி மற்றும் மொஹ்சின் கான் ஆகியோரும் தலா 1 விக்கெட் எடுத்தனர். ஷமி தனது 4 ஓவர்களில் 28 ரன்களையும், மொஹ்சின் கான் 19 ரன்களையும் கொடுத்தனர்.

© Copyright @2026 LIDEA. All Rights Reserved.