அதிமுக விடுத்துள்ள செய்திக்குறிப்பில், "மண்ணச்சநல்லூர் மக்களே,
இன்று பொம்மை முதல்வர் முக ஸ்டாலின் அவர்கள் யாருக்கு வாக்கு சேகரித்தார் என்பதை கவனித்தீர்களா?
சாதாரண குற்றச்சாட்டு அல்ல... உயிரை காக்க வேண்டிய மருத்துவத்துறையிலேயே முறைகேடு செய்ததாக கூறப்படும் ஒரு நபருக்கு வாக்கு கேட்க வந்துள்ளார் திமுக தலைவர் ஸ்டாலின் அவர்கள்.
ஊழலை பற்றி, முறைகேடுகளை பற்றி மேடைக்கு மேடை முழங்கும் முக ஸ்டாலின் அவர்களே, மண்ணச்சநல்லூர் வேட்பாளர் மீதான கிட்னி முறைகேடு புகார் குறித்து உங்களுக்கு தெரியாதா?
அல்லது
ஊழலும், முறைகேடும் செய்தவர்களுக்கு அடைக்கலம் கொடுப்பதுதான் உங்கள் கட்சியின் கொள்கையா?
இதுதான் திராவிட மாடலா?
மக்களே சிந்திப்பீர்!
வாக்களிப்பீர்!