விஜய்க்கு விழுந்த பேரிடி…. ராணிப்பேட்டையில் சரிந்த தவெக தூண்கள்…. ஏ.டி.எஸ்.டி. சுரேஷ், சசிகலா என அடுத்தடுத்து எஸ்கேப்….!!
SeithiSolai Tamil April 02, 2026 10:48 AM

தமிழக சட்டமன்றத் தேர்தல் நெருங்கும் வேளையில், தமிழக வெற்றிக் கழகத்தின் தலைமை மீது ஏற்பட்ட கடும் அதிருப்தியால் அக்கட்சியைச் சேர்ந்த 25-க்கும் மேற்பட்ட முக்கிய நிர்வாகிகள் விலகி அதிமுகவில் இணைந்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ராணிப்பேட்டை மேற்கு மாவட்டப் பொருளாளர் ஏ.டி.எஸ்.டி. சுரேஷ் மற்றும் துணைச் செயலாளர் சசிகலா உள்ளிட்ட முக்கியப் பொறுப்பாளர்கள், தவெக-வில் இருந்து விலகி ராணிப்பேட்டை அதிமுக மேற்கு மாவட்டச் செயலாளர் சுகுமார் தலைமையில் தங்களை அதிமுக-வில் இணைத்துக் கொண்டனர். தேர்தல் களத்தில் தீவிரம் காட்டி வரும் தவெக-விற்கு, மாவட்ட அளவில் இப்படி ஒரு பெரிய சரிவு ஏற்பட்டது கட்சித் தலைமைக்கு மிகப் பெரிய அதிர்ச்சியை அளித்துள்ளது.

ராணிப்பேட்டை பகுதியில் தவெக-வின் செயல்பாடுகள் குறித்து நீண்ட நாட்களாகவே அதிருப்தி நிலவி வந்ததாகக் கூறப்படும் நிலையில், தற்போது நிகழ்ந்துள்ள இந்த அணிமாற்றம் அதிமுக-விற்குப் பெரும் பலத்தைச் சேர்த்துள்ளது. இந்தத் திடீர் திருப்பம் ராணிப்பேட்டை தொகுதியின் தேர்தல் கணக்குகளை மாற்றியமைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

© Copyright @2026 LIDEA. All Rights Reserved.