டிரம்ப் நிறுவனத்துடன் கிரிப்டோ ஒப்பந்தம் செய்த பாகிஸ்தான்.. பொருளாதார நெருக்கடியை சமாளிக்க புதிய திட்டமா?
WEBDUNIA TAMIL April 02, 2026 02:48 PM

பாகிஸ்தான் தனது பொருளாதார நெருக்கடியை சமாளிக்க, டொனால்ட் டிரம்ப் தொடர்புடைய World Liberty Financial)நிறுவனத்துடன் கிரிப்டோ ஒப்பந்தம் ஒன்றை செய்துள்ளது. இதன்படி, டாலர் மதிப்பிலான ஸ்டேபிள்காயின் தொழில்நுட்பம் பாகிஸ்தானின் எல்லைகடந்த பண பரிமாற்றங்களில் இணைக்கப்பட உள்ளது.

பாகிஸ்தானின் அந்நியச் செலாவணி கையிருப்பு குறைந்து வரும் சூழலில், ஆண்டுக்கு 38 பில்லியன் டாலர் வரை வரும் வெளிநாட்டு பண பரிமாற்ற செலவை குறைக்கவும், வேகப்படுத்தவும் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

பாகிஸ்தானில் ஏற்கனவே 2 கோடிக்கும் அதிகமான கிரிப்டோ பயனர்கள் உள்ள நிலையில், இந்த ஒப்பந்தம் ஒரு புதிய டிஜிட்டல் நிதி பாதையை உருவாக்கியுள்ளது. இதன் மூலம் டிரம்பின் நிதி கட்டமைப்பு பில்லியன் கணக்கான டாலர் பரிமாற்றங்களை கையாளும் வாய்ப்பை பெறுகிறது.

இது வெறும் பொருளாதார நடவடிக்கை மட்டுமல்லாமல், ஒரு புதிய வகை சர்வதேச அரசியல் உறவாகவும் பார்க்கப்படுகிறது. பாரம்பரிய வங்கி முறைகளுக்கு அப்பாற்பட்ட இந்த டிஜிட்டல் பணப்பரிமாற்ற முறை, நிதி கண்காணிப்பு மற்றும் பாதுகாப்பில் இந்தியா போன்ற அண்டை நாடுகளுக்குப் புதிய சவால்களை ஏற்படுத்தக்கூடும் என்று நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.

Edited by Siva

© Copyright @2026 LIDEA. All Rights Reserved.