“அசுத்தம் பார்க்காத அன்பு!” – நாய்க்குட்டிக்காகச் சாக்கடையில் இறங்கிய பெண்மணி.. இணையத்தை உலுக்கும் வைரல் காட்சிகள்..!!
SeithiSolai Tamil April 03, 2026 04:48 PM

ஒரு குறுகிய சந்தில் உள்ள சாக்கடை கால்வாய்க்குள் தவறி விழுந்து தவித்துக் கொண்டிருந்த ஒரு சிறு நாய்க்குட்டியை, அப்பகுதியைச் சேர்ந்த பெண்மணி ஒருவர் துணிச்சலுடன் மீட்டு அதன் தாயிடம் ஒப்படைத்த நெகிழ்ச்சியான வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

சாக்கடை நீர் ஓடிக்கொண்டிருந்த அந்த ஆழமான மற்றும் அசுத்தமான பகுதிக்குள் இறங்க எவரும் முன்வராத நிலையில், அந்தப் பெண்மணி எவ்விதத் தயக்கமும் இன்றி உள்ளே கையை நுழைத்து, உயிருக்குப் போராடிக்கொண்டிருந்த நாய்க்குட்டியைப் பத்திரமாக வெளியே எடுத்தார்.

“>

மீட்கப்பட்ட அந்த நாய்க்குட்டியை அதன் தாயிடமும் மற்ற குட்டிகளிடமும் அவர் ஒப்படைத்தபோது, அந்தத் தாய் நாய் காட்டிய நன்றியுணர்வு அங்கிருந்தவர்களைக் கண்கலங்க வைத்தது. “மனிதாபிமானம் இன்னும் சாகவில்லை” என்பதற்கு உதாரணமாகத் திகழும் இந்தப் பெண்மணியின் செயலைப் பாராட்டி, நெட்டிசன்கள் இந்த வீடியோவை இணையத்தில் தீயாய்ப் பகிர்ந்து வருகின்றனர்.

© Copyright @2026 LIDEA. All Rights Reserved.