“நான் கேட்டது தான் எனக்கு வேணும்” அண்ணாமலையின் பிடிவாதம்…. பாஜகவின் அதிரடி பின்வாங்கல்…. தேர்தல் களத்தில் திடீர் திருப்பம்….!!
SeithiSolai Tamil April 03, 2026 06:48 PM

தமிழக சட்டசபைத் தேர்தலில் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலையை எப்படியாவது களமிறக்க வேண்டும் என்பதில் அக்கட்சியின் டெல்லி மேலிடம் உறுதியாக இருந்தது. இதற்காக திருப்பூர் தெற்கு அல்லது மொடக்குறிச்சி ஆகிய தொகுதிகளில் ஏதேனும் ஒன்றில் அண்ணாமலையை போட்டியிட வைக்க பாஜக தலைமை தீவிர முயற்சி மேற்கொண்டது. ஆனால், அண்ணாமலை தரப்போ கோவை வடக்கு தொகுதியில் போட்டியிடுவதில்தான் உறுதியாக இருந்ததாகக் கூறப்படுகிறது.

கடைசி வரை தனது முடிவில் அண்ணாமலை பிடிவாதமாக இருந்ததால், அவரைத் தேர்தலில் களம் இறக்கும் முடிவிலிருந்து பாஜக தலைமை தற்போது பின்வாங்கியுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்தத் திடீர் திருப்பத்தால் அண்ணாமலையின் தீவிர ஆதரவாளர்கள் கடும் அதிருப்தியில் ஆழ்ந்துள்ளனர். “கோவை வடக்கில் போட்டியிட்டால் வெற்றி உறுதி என நம்பிய அண்ணாமலைக்கு மேலிடம் செக் வைத்துள்ளதா?” என அரசியல் வட்டாரத்தில் காரசார விவாதங்கள் கிளம்பியுள்ளன.

© Copyright @2026 LIDEA. All Rights Reserved.