மாணிக்கம்தாகூர் மாமனாருக்கு சீட்? மேலூர் வேட்பாளர் மட்டும் அறிவிக்கப்படாதன் பின்னணி
Top Tamil News April 03, 2026 08:48 PM

திமுக  சார்பில் காங்கிரஸ் கூட்டணி, மதுரை மாவட்டத்தின் முக்கியத் தொகுதியான மேலூர் தொகுதிக்கு மட்டும் வேட்பாளர் அறிவிக்கப்படவில்லை.

திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சிக்கு 28 தொகுதிகள் ஒதுக்கப்பட்டிருந்த நிலையில்,27 தொகுதிகளுக்கு வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. மதுரை மாவட்டத்தின் முக்கிய தொகுதியான மேலூர் தொகுதிக்கு மட்டும் வேட்பாளர் அறிவிக்கப்படவில்லை.மேலூர் தொகுதியைத் தவிர 27 இடங்களுக்கான வேட்பாளர் பெயர்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. தற்பொழுது காங்கிரஸ் கட்சி சார்பில் சட்டமன்ற உறுப்பினர்களாக உள்ள 17 பேரில் 11 பேருக்கு மீண்டும் வாய்ப்பு வழங்கியுள்ளது காங்கிரஸ் கட்சி. ஐந்து பேர் வாய்ப்பு வழங்கப்படவில்லை.

மேலூர் சட்டமன்றத் தொகுதியில் 2021 தேர்தலில் போட்டியிட்ட காங்கிரஸ் வேட்பாளர் ரவிச்சந்திரன் மாணிக்கம் தாகூர் மாமனார் ஆவர். இம்முறையும் மாணிக்கம் தாகூர் தரப்பு மேலூர் சட்டமன்ற தொகுதியை கேட்டு வரும் நிலையில் வேட்பாளர் பெயர் அறிவிக்கவில்லை. மாமனாருக்காக மதுரை வடக்கு தொகுதியை மாணிக்கம் தாகூர் கேட்ட நிலையில், அதனை திமுக கொடுக்கவில்லை. 

© Copyright @2026 LIDEA. All Rights Reserved.