நடிகை தம்பி ராமையாவின் மகன் பூபதி இயக்கியுள்ள TN2026 தங்க நட்சத்திரம். இந்த திரைப்படம் வருகிற 10ம்தேதி வெளியாகவுள்ளது. ஒரு நடிகர் எப்படி அரசியல்வாதியாக மாறி வெற்றி பெறுகிறார் என்பதுதான் இந்த படத்தின் கதை. இந்த படத்தில் நட்டி நடராஜ் ஹீரோவாக நடித்திருக்கிறார். நேற்று இப்படத்தின் டீசர் வீடியோ வெளியானது. அதில், நட்டியின் தோற்றத்தை பார்க்கும்போது விஜயின் ஞாபகம் வருகிறது.. அதோடு சினிமாவில் இருந்து அரசியலுக்கு வருபவர்களை அரசியல்வாதிகள் கடுமையாக விமர்சிப்பது போல வசனமும் டீசரில் இடம் பெற்றிருந்தது..
இது விஜய் ரசிகர்களை கோபப்படுத்தியிருக்கிறது. சமூக வலைதளங்களில் அவர்கள் நட்டி நடராஜை திட்டி வருகிறார்கள். இந்நிலையில் இதுபற்றி கருத்து தெரிவித்த தவெக முக்கிய நிர்வாகி ஆதவ் அர்ஜுனா ‘எங்கள் தலைவரின் ஜனநாயகம் படம் ரிலீஸாகவில்லை. ஆனால் அவரை இழிவாக சித்தரித்து ஒரு படம் உருவாகிய படம் வெளியாகிறது. அதற்கு காரணம் இந்த படத்தை உதயநிதியின் ரெட் ஜெயண்ட் நிறுவனம் வெளியிடுகிறது.. நாங்கள் இன்னும் அந்த படத்தை பார்க்கவில்லை.. ஆனால் எங்கள் தலைவரை இழிவாக சித்தரித்து காட்சிகள் இருப்பதாக செய்திகள் கிடைத்தது..
திமுக ஆட்சி வந்துவிட்டாலே உதயநிதியின் கட்டுப்பாட்டில் தமிழ சினிமா வந்துவிடும். பல விநியோகஸ்தர்கள் காணாமல் போய்விட்டனர். உதயநிதியின் ரெட்ஜெயண்ட் நிறுவனம் 95 சதவீத திரைப்படங்களை வெளியிடுகிறது. ஜனநாயகன் வெளியாகாது. ஆனால் இந்த படம் வெளியாகும் என்றால் நீங்களே புரிந்து கொள்ளுங்கள்.. திமுகவும் பாஜகவும் கூட்டுதான்.. அவர்கள் இருவரும் சேர்ந்துதான் இது போன்றவர்களை செய்கிறார்கள்’ என பொங்கியிருக்கிறார்.