ஏழாண்டுகளுக்கு பிறகு இந்தியாவிற்கு வரவிருந்த ஈரானிய கச்சா எண்ணெய் ஏற்றி வந்த 'பிங் ஷுன்' என்ற கப்பல், திடீரென தனது பயண பாதையை மாற்றி சீனா நோக்கி திரும்பியுள்ளது.
6 லட்சம் பேரல் கச்சா எண்ணெய்யுடன் குஜராத்தின் வாடினார் துறைமுகத்திற்கு வரவிருந்த இந்த கப்பல், அமெரிக்காவின் பொருளாதார தடைகளுக்கு உள்ளான ஒன்றாகும். சமீபத்தில் அமெரிக்கா வழங்கிய 30 நாள் தற்காலிக விலக்கை தொடர்ந்து, இந்திய சுத்திகரிப்பு நிறுவனங்கள் ஈரானிய எண்ணெயை பெற முயன்றன.
இருப்பினும், பணம் செலுத்துவதில் ஏற்பட்ட சிக்கல்கள் மற்றும் கடன் கால கெடுவை விற்பனையாளர்கள் குறைத்தது போன்ற காரணங்களால் இந்த திருப்பம் ஏற்பட்டுள்ளதாக கருதப்படுகிறது.
2019-ஆம் ஆண்டுக்கு பிறகு இந்தியா இறக்குமதி செய்யவிருந்த முதல் ஈரானிய எண்ணெய் இதுவாகும். ஏப்ரல் 19-ஆம் தேதியுடன் அமெரிக்காவின் இந்த சலுகை காலம் முடிவடைய உள்ள நிலையில், இந்த விவகாரம் முக்கியத்துவம் பெறுகிறது.
ஒருவேளை பண பரிமாற்ற சிக்கல்கள் தீர்க்கப்பட்டால், மீண்டும் இந்தக் கப்பல் இந்தியா நோக்கி திரும்ப வாய்ப்புள்ளதாக ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர். தற்போது நிலவும் அரசியல் பதற்றங்களுக்கு மத்தியில், வர்த்தக ரீதியான முடிவுகளே எண்ணெய் இறக்குமதியை தீர்மானிக்கின்றன.
Edited by Siva