"ஜெகத்ரட்சகனுக்கு ஜாக்பாட்!" - பறிமுதல் செய்த 89 கோடி சொத்துகளைத் திரும்ப ஒப்படைக்க உச்ச நீதிமன்றம் அதிரடி உத்தரவு..!
Top Tamil News April 03, 2026 06:48 PM

 திமுக எம்.பி., ஜெகத்ரட்சகன், சிங்கப்பூர் சார்ந்த நிறுவனத்தில் சட்டவிரோதமாக பணத்தை அந்நிய செலவாணிக்கு மாற்றியதாக குற்றம்சாட்டப்பட்டது. இதனையடுத்து ஜெகத்ரட்சகன் மற்றும் அவரது குடும்ப உறுப்பினர்களின் ரூ.89.19 கோடி மதிப்பிலான சொத்துகளை அமலாக்கத்துறை முடக்கியது. இதை எதிர்த்து சுப்ரீம்கோர்ட்டில் ஜெகத்ரட்சகன் வழக்கு தொடர்ந்தார்.

இந்த வழக்கை விசாரித்த சுப்ரீம்கோர்ட் நீதிபதிகள் ஜெகத்ரட்சகனின் சொத்துக்களை பறிமுதல் செய்த அமலாக்கத்துறையின் உத்தரவை ரத்து செய்து உத்தரவிட்டனர். ''சொத்துக்கள் பறிமுதல் நடவடிக்கை சட்டப்படி செல்லத்தக்கது அல்ல, அடிப்படை ஆதாரமற்றது என்று நீதிபதிகள் கருத்து தெரிவித்தனர்.

© Copyright @2026 LIDEA. All Rights Reserved.