அதிமுக, திமுக போன்ற திராவிட கட்சிகளுக்கு எதிராக தமிழ் தேசியத்தை முன்னிறுத்தி அரசியல் கட்சியை துவங்கியவர் சீமான் . கட்சி துவங்கியது முதலில் திராவிட கட்சிகளுக்கு எதிராக சீமான் பேசி வருகிறார். எனவே அதிமுக, திமுக ஆகிய இரண்டு கட்சிகளையும் பிடிக்காதவர்கள் அவருக்கு வாக்களித்து வருகிறார்கள்..
பழனிச்சாமியை விடவும், ஸ்டாலினை விடவும் தினமும் செய்தியாளர்களை சந்திப்பது, அடிக்கடி பொதுக்கூட்டங்கள் போடுவது தேர்தல் அரசியல் வேலைகளில் ஈடுபட்டு வருகிறார்.
ஆனாலும் தமிழகத்தை பொறுத்தவரை அதிமுக, திமுக ஆகிஅ கட்சிகளுக்கு மாறி மாறி ஓட்டு போட்டு பழக்கப்பட்டவர்கள் சீமானை ஆதரிக்க தயங்குகிறார்கள்.. ஆனாலும், நாம் தமிழர் கட்சியின் வாக்கு வங்கி 8 சதவீதமாக உயர்ந்திருக்கிறது. ஒருபக்கம் சமூக வலைதளங்களில் ஒரு ட்ரோல் மெட்டீரியலாகவும் சீமான் இருக்கிறார்.. அவரின் பல பேச்சுக்கள் ட்ரோல் செய்யப்பட்டது..
ஒருபக்கம், கட்சி துவங்கியதில் இருந்து நாம் தமிழர் கட்சி தேர்தலில் தனித்து போட்டியிட்டு வருகிறது. விரைவில் நடக்கவுள்ள சட்டமன்ற தேர்தலிலும் நாம் தமிழர் கட்சி தனித்து போட்டியிடுகிறது. இந்நிலையில், இன்று விஜய் போட்டியிடும் பெரம்பலூர் தொகுதியில் பிரச்சாரம் செய்த சீமான் ‘நீ எனக்கு ஓட்டு போட்டா போடு.. இல்லனா போ.. உடம்புல தெம்பு இருக்கிற வரை இதே இடத்தில நின்னு கத்தி கத்தி செத்து கூட போவேன்.. ஆனா சீட்டுக்கும் நோட்டுக்கும் யாருகிட்டயும் கை கட்ட மாட்டேன்.. சரணடைந்து வாழ்வதற்கு சண்டையிட்டு சாவதே மேல்’ பேசினார்..
சமீபத்தில் காரைக்குடியில் பேசிய சீமான் ‘ஒன்னு என்ன கூட்டிட்டு போய் சாப்பாடுல விஷம் வச்சி கொன்னுடு.. நிம்மதியா என்ன சாக விடு.. இல்லன்னா நாட்ட என்கிட்ட கொடுத்துட்டு வாழ பாரு.. உருப்படியா ஒரு முடிவு எடு.. கத்தி கத்தி சாக விடாதே.. 15 வருஷமா கத்திட்டேன்.. என் பாவம் உன்ன சும்மா விடாது’ என பேசியிருந்தது குறிப்பிடத்தக்கது.