மதுரையில் கறிக்கடைகளை மூடுவேன்!.. சுந்தர்.சிக்கு பீதிய காட்டிட்டாங்களே!. அரசியல்னா சும்மாவா?!...
Webdunia Tamil April 06, 2026 09:48 PM


தமிழ் சினிமாவில் 30 வருடங்களுக்கு மேல் திரைப்படங்களை இயக்கி வருபவர் சுந்தர்.சி. நடிகையும், பாஜக பிரமுகருமான குஷ்புவின் கணவர் இவர். இவருக்கு மிகவும் நெருக்கமான ஏசி சண்முகத்தின் புதிய நீதிக்கட்சி தேசிய ஜனநாயக கூட்டணியில் இருப்பதால் அந்தக் கட்சிக்கு ஒரு தொகுதி ஒதுக்கப்பட்டது.

அப்படி ஒதுக்கப்பட்ட மதுரை மத்திய தொகுதியில் சுந்தர்.சி-ஐ நிற்க வைத்திருக்கிறார் ஏசி சண்முகம்.இதையடுத்து கடந்த சில நாட்களாகவே மதுரை மத்திய தொகுதியில் சுந்தர்.சி பிரச்சாரம் செய்து வருகிறார்.

இந்நிலையில் நான் வெற்றி பெற்றால் புனித தளமான மதுரை மீனாட்சி அம்மன் கோயில் அருகே அமைந்துள்ள இறைச்சி விற்பனை கடைகளை தடை செய்து கோயில் நகரத்தின் புனிதத்தை பாதுகாப்பேன் என சுந்தர் சி சொன்னது போல ஒரு செய்தியை பலரும் சமூக வலைதளங்களில் பரப்பினர்,

இதைப்பார்த்து ஜெர்க்கான சுந்தர்.சி தனது ட்விட்டர் பக்கத்தில் இதற்கு மறுப்பு தெரிவித்துள்ளார். ‘தேர்தலில் நான் வெற்றி பெற்றால் மதுரை மத்திய தொகுதியில் இறைச்சி கடைகளை மூடுவேன் என நான் சொன்னதாக பரவும் செய்தி முற்றிலும் பொய்யானது.
மக்களின் உணர்வுகளையும் உரிமைகளையும் மதிக்கத் தெரிந்தவன் நான் என்பது மக்களுக்கே தெரியும். போட்டியை நேரடியாக எதிர்கொள்ள தைரியம் இன்றி குறுக்கு வழியை நாடுவோரின் இதுபோன்ற கீழ்தரமான நடவடிக்ககைகளுக்கு நமது ஒற்றுமை மற்றும் வெற்றியால் பதிலடி தருவோம்’ என பதிவிட்டிருக்கிறார்.
© Copyright @2026 LIDEA. All Rights Reserved.