நாளையும் விஜய் சென்னை பிரச்சாரம் ரத்து!. இதுக்கு இல்லையா ஒரு எண்டு!..
Webdunia Tamil April 06, 2026 11:48 PM


தமிழகத்தில் வருகிற 23ம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெறவிருக்கும் நிலையில் தவெக தலைவர் விஜய் திருச்சியில் மட்டுமே பிரச்சாரம் செய்திருக்கிறார். சில நாட்களுக்கு முன்பு சென்னை பெரம்பூர் தொகுதியில் பிரச்சாரம் செய்தவர் அதன் பின் வில்லிவாக்கம், அண்ணா நகர், விருகம்பாக்கம் போன்ற பகுதிகளில் பிரச்சாரம் செய்த திட்டமிட்டிருந்தார். ஆனால் போலீசார் சரியான பாதுகாப்பு கொடுக்காததால் அவர் அந்த பிரச்சாரத்தை ரத்து செய்தார்..

இன்று வில்லிவாக்கம், தி.நகர் உள்ளிட்ட சில பகுதிகளில் விஜய் பிரச்சாரம் செய்வதற்காக தவெக சார்பில் அனுமதி கோரப்பட்டது. ஆனால் முதலில் 2 மணி முதல் 6 மணி வரை பிரச்சாரம் செய்துகொள்ள அனுமதி கொடுத்த போலீஸ் திடீரென ஒரு மணி நேரம் மட்டுமே அனுமதி என சொல்ல விஜயின் பிரச்சாரம் இன்று ரத்து செய்யப்பட்டது.

அதேபோல் நாளை சென்னை சைதாப்பேட்டை பகுதியில் விஜய் பிரச்சாரம் செய்ய தவெக செய்ய அனுமதி கோரப்பட்டது. அதற்கும் ஒரு மணி நேரம் மட்டுமே போலீசார் அனுமதி கொடுத்ததால் அந்த பிரச்சாரத்தையும் விஜய் தற்போது ரத்து செய்திருக்கிறார். சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் 17 நாட்களே உள்ள நிலையில் விஜய் இப்படி பிரச்சாரத்தை ரத்து செய்து கொண்டே போனால் அவர் எத்தனை தொகுதில பிரச்சாரம் செய்வார் என்கிற கேள்வி எழுந்திருக்கிறது.

ஒருபக்கம் எடப்பாடி பழனிச்சாமி, முக ஸ்டாலின், உதயநிதி, சீமான் போன்றவர்கள் பல தொகுதிகளிலும் பல மணி நேரங்கள் பிரச்சாரம் செய்யும் போது எங்கள் தலைவருக்கு மட்டும் ஒரு மணி நேரம் என போலீசார் கெடுபிடி காட்டுவது ஜனநாயகத்திற்கு எதிரானது என ஆதவ் அர்ஜுனா இன்று காலை பேசியிருந்தது குறிப்பிடத்தக்கது.

© Copyright @2026 LIDEA. All Rights Reserved.