“ஒரு மணிநேரம் போதுமா?”… கொதிக்கும் தமிழக வெற்றி கழகம்… தி.நகர், வில்லிவாக்கம் பிரசாரம் 'கேன்சல்'.. பரபரக்கும் தேர்தல் களம்..!!!
SeithiSolai Tamil April 07, 2026 12:48 AM

தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய், சென்னையில் இன்று மேற்கொள்ளவிருந்த பிரசாரம் அதிரடியாக ரத்து செய்யப்பட்டுள்ளது. சென்னை வில்லிவாக்கம் மற்றும் தி.நகர் பகுதிகளில் விஜய் இன்று மாலை தேர்தல் பிரசாரம் செய்யத் திட்டமிட்டிருந்தார்.

இதற்குக் காவல்துறை அனுமதி வழங்கியிருந்தாலும், பிரசாரம் செய்வதற்கான கால அவகாசம் மிகக் குறைவாக வழங்கப்பட்டதே இந்த ரத்துக்குக் காரணம் என்று அக்கட்சித் தரப்பில் கூறப்படுகிறது.

தி.நகரில் 4 மணிநேரம் பிரசாரம் செய்ய அனுமதி கோரப்பட்ட நிலையில், ஒரு மணிநேரம் மட்டுமே அனுமதி வழங்கப்பட்டதாகவும், வில்லிவாக்கத்திலிருந்து தி.நகருக்குச் செல்வதற்கான பயண நேரத்தைக் கூட கணக்கில் கொள்ளாமல் காவல்துறை கெடுபிடி செய்ததாகவும் தவெக நிர்வாகிகள் குற்றம் சாட்டியுள்ளனர்.

காவல்துறையின் இந்த ஒருதலைப்பட்சமான நடவடிக்கையால் ஆத்திரமடைந்த விஜய், அரைகுறையாகப் பிரசாரம் செய்ய விரும்பாமல் இன்றைய நிகழ்ச்சியை முழுமையாக ரத்து செய்துவிட்டார்.

விஜய்யின் வருகையை எதிர்பார்த்து காலை முதலே காத்திருந்த ஆயிரக்கணக்கான தொண்டர்களும், பொதுமக்களும் இந்தத் திடீர் அறிவிப்பால் மிகுந்த ஏமாற்றமடைந்தனர்.

இதுகுறித்து தேர்தல் ஆணையத்திடம் புகார் அளிக்கத் தமிழக வெற்றி கழகம் முடிவு செய்துள்ளது. “ஆளுங்கட்சிக்கு ஒரு நீதி, எங்களுக்கு ஒரு நீதியா?” என்று தவெக பொதுச் செயலாளர் ஆதா்வ் அர்ஜுனா கேள்வி எழுப்பியுள்ளதால், சென்னை அரசியல் களம் தற்போது உச்சகட்டப் பரபரப்பில் உள்ளது.

© Copyright @2026 LIDEA. All Rights Reserved.