சட்டமன்றத்தில் பெண்களுக்கு 33 சதவீத இடஒதுக்கீடு; மார்க்சிஸ்ட் கட்சி தேர்தல் அறிக்கை வெளியீடு..!
Seithipunal Tamil April 07, 2026 02:48 AM

தமிழ்நாடு சட்டப்பேரவை தேர்தலை வரும் 23- ஆம் தேதி நடைபெறவுள்ளது. இதனை முன்னிட்டு, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வெளியிட்டள்ள தேர்தல் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளதயாவது;

''அனைத்து தொழிலாளர்களுக்கும் மாதம் ரூ.26,000 குறைந்தபட்ச ஊதியம். அனைத்து துறைகளிலும் 8 மணி நேர வேலை. மிகை நேரத்திற்கு இரட்டிப்பு சம்பளம். விவசாயத் தொழிலாளர்களுக்கு நாள் கூலி ரூ.700 ஆக நிர்ணயிக்கப்படும். 200 நாள் வேலை உறுதி செய்யப்படும்.

விவசாயிகளுக்கு அரசு சார்பில் தனி காப்பீட்டு நிறுவனம் தொடங்கப்படும். காவிரி-வைகை-குண்டாறு இணைப்பு திட்டம் விரைந்து செயல்படுத்தப்படும். அனைவருக்கும் இலவச மருத்துவம் உறுதி செய்யும் சட்டம் இயற்றப்படும். மாநில மொத்த உற்பத்தியில் 8 சதவீதம் சுகாதாரத்திற்கு ஒதுக்கீடு செய்யப்படும். தேசிய கல்விக் கொள்கை 2020-ஐ தமிழ்நாட்டில் அமல்படுத்த மறுப்பதாகவும், மருத்துவம், பொறியியல் உட்பட உயர்கல்வி வரை தாய்மொழியில் கற்பிக்கப்படும்.

சட்டமன்றத்தில் பெண்களுக்கு 33 சதவீத இடஒதுக்கீடு விரைந்து அமல்படுத்தப்படும். வன்கொடுமை வழக்குகளை 6 மாதத்திற்குள் விசாரித்து முடிக்க அனைத்து மாவட்டங்களிலும் தனி நீதிமன்றங்கள் அமைக்கப்படும். நலிந்த பிரிவு பெண்களுக்கு மாதம் ரூ.5,000 உதவித்தொகை வழங்கப்படும். 60 வயதுக்கு மேற்பட்ட மீனவர்களுக்கு மாதம் ரூ.3,000 ஓய்வூதியம், ஆட்டோ தொழிலாளர்களுக்கு ரூ.1 லட்சம் புதிய ஆட்டோ மானியம், மாற்றுத்திறனாளிகளுக்கு உதவித்தொகை ரூ.6,000 ஆக உயர்வு.''என அறிவிக்கப்பட்டுள்ளது.

பாஜக - ஆர்எஸ்எஸ் வகுப்புவாத அரசியலை எதிர்த்தும், மாநில உரிமைகளை காக்கவும், மதச்சார்பற்ற ஆட்சியை நிலைநாட்டவும் திமுக கூட்டணிக்கு ஆதரவளிக்குமாறு தமிழக மக்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளது.

© Copyright @2026 LIDEA. All Rights Reserved.