தமிழக சட்டமன்ற தேர்தல் வரும் 23-ஆம் தேதி நடைபெறவுள்ளது. இந்த சட்டமன்ற தேர்தலில் திமுக சார்பில் முதல் முதலாக ஓ.பன்னீர் செல்வம் போட்டியிடுகிறார். அதனபடி, இன்று வேட்புமனு தாக்கல் செய்வதற்கு கடைசி நாளாகும். இன்று தனது சொத்து மதிப்பு குறித்து பன்னீர்செல்வம் வேட்புமனுவின் குறிப்பிட்டுள்ள தகவல்கள் வெளியாகியுள்ளன.
தேனி மாவட்டம் போடிநாயக்கனூரில் திமுக சார்பில் போட்டியிடும் ஓ.பன்னீர்செல்வம் தாக்கல் செய்துள்ள பிரமாண பத்திரத்தில், தன்னிடம் ரொக்கம், வங்கியிருப்பு, வாகனங்கள் மற்றும் தங்க நகைகள் என 2.94 கோடி ரூபாய் மதிப்பிலான அசையும் சொத்துக்கள் இருப்பதாக குறிப்பிட்டுள்ளார்.
இதேபோல் விவசாயம் மற்றும் விவசாயம் இல்லாத நிலங்கள், வணிக கட்டிடங்கள் என 9.17 கோடி ரூபாய் மதிப்பிலான அசையா சொத்துக்கள் இருப்பதாகவும், ஆக மொத்தம் ரூ.12.11 கோடி மதிப்பிலான சொத்துகள் இருப்பதாக தெரிவித்துள்ளார்.
மேலும் தனது மகனான முன்னாள் தேனி எம்பி ரவீந்திரநாத், இளைய மகன் ஜெயபிரதீப் உள்ளிட்டோரின் கடன் மற்றும் வங்கியில் பெற்ற வாகன கடன் என 5.40 கோடி ரூபாய்க்கு கடன் உள்ளதாக தெரிவித்துள்ளார்.