நாளை ராஜஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் ஹர்திக் பாண்டியா விளையாடுவாரா? மாட்டாரா..?
Seithipunal Tamil April 07, 2026 06:48 AM

மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டன் ஹர்திக் பாண்டியா உடல்நிலை சரியில்லாத காரணத்தினால் நேற்று முன்தினம் டெல்லி அருண் ஜெட்லி மைதானத்தில், டெல்லிக்கு எதிரான போட்டியில் பங்கேற்கவில்லை. இந்நிலையில் அடுத்த ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிராக நடைபெறவுள்ள போட்டியில் விளையாடுவார் என்ற கேள்வி எழுந்தது. இந்நிலையில், மும்பை அணியின் பந்துவீச்சு பயிற்சியாளர் பரஸ் மாம்ப்ரே அவர் அடுத்த போட்டியிவ் விளையாவார் என உறுதிப்படுத்தியுள்ளார். 

இந்த போட்டி நாளை கவுகாத்தியில் உள்ள ஏசிஏ மைதானத்தில் நடைபெறவுள்ளது. டெல்லிக்கு எதிரான போட்டியில் சூரியகுமார் தலைமையில், மும்பை இந்தியன்ஸ் அணி 06 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வியைத் தழுவியது.

தற்போது உடல்நலம் தேறியுள்ள பாண்டியா, ஞாயிற்றுக்கிழமை இரவு கவுகாத்தியில் நடைபெற்ற மும்பை இந்தியன்ஸ் அணியின் வலைப்பயிற்சியில் ஈடுபட்டு, பேட்டிங் மற்றும் பந்துவீச்சில் முழு வீச்சில் செயல்பட்டார்.

இது குறித்து செய்தியாளர் சந்திப்பில் பேசிய அணியின் பந்துவீச்சு பயிற்றுவிப்பாளர் பரஸ் மாம்ப்ரே, "ஹர்திக் பாண்டியா அடுத்த போட்டியில் விளையாடுவார். நேற்று அவர் இரண்டு மணி நேரம் தீவிர வலைப்பயிற்சியில் ஈடுபட்டார். அவர் தற்போது முழு உடல் தகுதியுடன் இருக்கிறார். அவருக்கு காயம் ஏதும் ஏற்படவில்லை, உடல்நலக்குறைவு காரணமாகவே கடந்த போட்டியில் விளையாடவில்லை," என்று தெளிவுபடுத்தியுள்ளார். 2 ஆட்டங்களில் விளையாடியுள்ள மும்பை அணி ஒரு வெற்றி ஒரு தோல்வி என உள்ளது.

© Copyright @2026 LIDEA. All Rights Reserved.