வீரகனூர் பகுதியில் நடைபெற்ற தேர்தல் பிரசாரத்தில் உரையாற்றிய அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலினை மிகக் கடுமையாக விமர்சித்துப் பேசியுள்ளது தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. “என்னைப்பற்றி தரக்குறைவாகப் பேசினால் சும்மா விடமாட்டேன்” என எச்சரித்த அவர், உதயநிதி ஸ்டாலினின் சமூக வலைதள செயல்பாடுகளைக் கிண்டல் செய்தார். “ராத்திரி 2 மணிக்கு இன்ஸ்டாகிராமில் யாருடைய காலைத் தேடி ரீ-போஸ்ட் போடுகிறீர்கள் என்று எனக்கும் கேட்கத் தெரியும்” என ஆவேசமாக கேள்வி எழுப்பினார்.
மேலும், பழைய சர்ச்சைக்குரிய சம்பவங்களை நினைவு கூர்ந்த எடப்பாடி பழனிசாமி, “ஏற்கனவே காலைத் தேடிப்போய்தான் பால்டாயில் குடித்து தப்பித்துள்ளீர்கள்; மீண்டும் அப்படி ஒரு காரியம் செய்தால் உங்கள் உடல்நிலை தாங்காது” என உதயநிதியை நோக்கி தனிப்பட்ட ரீதியில் விமர்சனங்களை முன்வைத்தார். தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், ஆளுங்கட்சி மற்றும் எதிர்க்கட்சித் தலைவர்களுக்கிடையே ஏற்பட்டுள்ள இந்த நேரடி வார்த்தை போர், தொண்டர்களிடையே பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.