“பெத்த தாயை இப்படியா சித்ரவதை செய்வாங்க?” வாயைக் கட்டி உயிருடன் எரித்தக் கொடூரம்…. மகனிடம் போலீஸ் விசாரணை….!!
SeithiSolai Tamil April 07, 2026 04:48 AM

மத்தியப் பிரதேச மாநிலம் சஹ்ரி கிராமத்தில், 60 வயதான ஹல்லி பாய் என்ற மூதாட்டி தீயில் கருகி உயிரிழந்த சம்பவம் அந்தப் பகுதியையே அதிர வைத்துள்ளது. கணவரை இழந்த ஹல்லி பாய், தனது மகன் சந்தோஷுடன் வசித்து வந்த நிலையில், கடந்த 4-ம் தேதி நள்ளிரவு அவரது வீட்டில் திடீரென தீப்பிடித்துள்ளது. அக்கம்பக்கத்தினர் ஓடி வந்து பார்த்தபோது மூதாட்டி உடல் கருகிப் பிணமாகக் கிடந்துள்ளார். ஆனால், போலீசார் வந்து சடலத்தை மீட்டபோதுதான் அந்தப் பயங்கர உண்மை வெளிச்சத்திற்கு வந்தது.

உயிரிழந்த ஹல்லி பாயின் கைகளும், வாயும் கயிறால் கட்டப்பட்டிருந்தது போலீசாரை அதிரவைத்தது. இது விபத்து அல்ல, திட்டமிட்டக் கொலை என்பது முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. பெத்த தாயை இப்படி வாயைக் கட்டி, சித்ரவதை செய்து உயிருடன் எரித்துக் கொல்ல யாருக்கு மனம் வரும் என ஊர் மக்களே கண்ணீர் வடிக்கின்றனர். சொத்து தகராறா அல்லது வேறு ஏதேனும் காரணமா என்ற கோணத்தில் போலீசார் விசாரணையைத் தீவிரப்படுத்தியுள்ளனர். சந்தேகத்தின் பேரில் அவரது மகன் சந்தோஷைப் பிடித்து போலீசார் கிடுக்கிப்பிடி விசாரணை நடத்தி வருகின்றனர்.

© Copyright @2026 LIDEA. All Rights Reserved.