ஸ்மார்ட்போன் கையில் இல்லாத மனிதர்களே இல்லை எனும் அளவிற்குத் தொழில்நுட்பம் வளர்ந்துவிட்ட நிலையில், எதிர்பாராத விதமாகப் போன் தண்ணீரில் விழுந்துவிட்டால் பதற்றத்தில் நாம் செய்யும் சில சிறு தவறுகள், அந்த விலையுயர்ந்த போனை நிரந்தரமாகச் குப்பைக்கு அனுப்பும் நிலையை உருவாக்கிவிடும். போன் தண்ணீரில் விழுந்தவுடன் அது வேலை செய்கிறதா என்பதைச் சோதிக்கப் பலரும் செய்யும் முதல் காரியம் 'பவர் பட்டனை' அழுத்துவதுதான். ஆனால், இதுவே அந்தப் போனுக்கு வைக்கும் இறுதி அஞ்சலி என்பது உங்களுக்குத் தெரியுமா? போனுக்குள் ஈரம் இருக்கும்போது மின்சாரம் பாய்ந்தால், உள்ளே 'ஷார்ட் சர்கியூட்' ஏற்பட்டு மதர்போர்டு முற்றிலும் கருகிவிடும் வாய்ப்பு அதிகம் உள்ளது.
அடுத்ததாக, போனுக்குள் இருக்கும் தண்ணீரை வெளியேற்றுகிறோம் என்ற பெயரில் பலர் போனை வேகமாகப் பிடித்துக் குலுக்குவார்கள். இப்படிச் செய்வதால் ஒரு பகுதியில் இருக்கும் தண்ணீர், போனின் மற்ற பாதுகாப்பான பாகங்களுக்கும் பரவி சேதத்தை இன்னும் அதிகப்படுத்தும். அதேபோல், ஈரத்தை உலர வைக்கிறேன் என்று 'ஹேர் ட்ரையர்' கொண்டு அதிக வெப்பத்தைச் செலுத்தினால், போனுக்குள் இருக்கும் மென்மையான பிளாஸ்டிக் பாகங்கள் மற்றும் சென்சார்கள் உருகிப் போய்விடும். அரிசி மூட்டைக்குள் வைப்பதும் கூட சில நேரங்களில் போனின் துளைகளுக்குள் மாவு படிந்து புதிய சிக்கலை உண்டாக்கும் என்கின்றனர் தொழில்நுட்ப வல்லுநர்கள்.

போன் தண்ணீரில் விழுந்துவிட்டால் முதலில் செய்ய வேண்டியது, அதன் மின் இணைப்பைத் துண்டித்து , சிம் கார்டு மற்றும் மெமரி கார்டுகளை அகற்றுவதுதான். பின்னர் ஒரு மென்மையான துணியால் துடைத்துவிட்டு, உடனடியாக ஒரு அங்கீகரிக்கப்பட்ட சர்வீஸ் சென்டருக்குக் கொண்டு செல்வதே புத்திசாலித்தனமான செயலாகும். "நானே சரி செய்கிறேன்" என்று செய்யும் விபரீத முயற்சிகள், ஆயிரக்கணக்கில் செலவை இழுத்து விட்டுவிடும். எனவே, போன் விஷயத்தில் அவசரப்படாமல் நிதானமாகச் செயல்படுவது உங்கள் பணத்தையும் போனின் ஆயுளையும் காப்பாற்றும்.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!
உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!