“நான் அப்படி சொல்லவே இல்லங்க”- சுந்தர். சி விளக்கம்
Top Tamil News April 06, 2026 10:48 PM

தேர்தலில் நான் வெற்றி பெற்றால் மதுரை மத்திய தொகுதியில் இறைச்சி கடைகளை மூடுவேன் என நான் சொன்னதாக பரவும் செய்தி முற்றிலும் பொய்யானது என மதுரை மத்தி தொகுதி NDA வேட்பாளர் சுந்தர்.சி விளக்கம் அளித்துள்ளார்.


நான் வெற்றி பெற்று வந்தால் புனித தலமான மதுரை மீனாட்சி அம்மன் ஆலயம் அமைந்துள்ள மதுரை மத்திய தொகுதியில் இறைச்சி விற்பனையை தடை செய்து கோவில் நகரத்தின் புனிதத்தை பாதுகாப்பேன் என மதுரை மத்தி தொகுதி NDA வேட்பாளர் சுந்தர்.சி கூறியதாக இணையத்தில் வைரலானது.

அந்த செய்தியை எக்ஸ் தளத்தில் மேற்கோள் காட்டியுள்ள சுந்தர்.சி, “தேர்தலில் நான் வெற்றி பெற்றால் மதுரை மத்திய தொகுதியில் இறைச்சி கடைகளை மூடுவேன் என நான் சொன்னதாக பரவும் செய்தி முற்றிலும் பொய்யானது. மக்களின் உணர்வுகளையும் உரிமைகளையும்  மதிக்கத் தெரிந்தவன் நான் என்பது மக்களுக்கே தெரியும்.
போட்டியை நேரடியாக எதிர்கொள்ள தைரியம் இன்றி குறுக்கு வழியை நாடுவோரின் இதுபோன்ற கீழ்தரமான நடவடிக்ககைகளுக்கு நமது ஒற்றுமை மற்றும் வெற்றியால் பதிலடி தருவோம்” எனக் குறிப்பிட்டுள்ளார்.

© Copyright @2026 LIDEA. All Rights Reserved.