IPL சீசனில் பற்றி எரியும் ஹைதராபாத் பிரியாணி… இஷான் கிஷனுடன் சாப்பிட்ட கிளாசனுக்கு வேர்த்து கொட்டியது ஏன்…? வைரலாகும் வீடியோ…!!
SeithiSolai Tamil April 07, 2026 09:48 PM

கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கரின் மகன் அர்ஜுன் டெண்டுல்கர் தற்போது 2026ம் ஆண்டு ஐபிஎல் தொடரில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிக்காக விளையாடி வரும் நிலையில் கடந்த மார்ச் மாதம் சானியா சண்டோக் என்பவரைத் திருமணம் செய்து கொண்டார்.

அர்ஜுன் டெண்டுல்கருக்கு ஹைதராபாத் பிரியாணி என்றால் மிகவும் பிடிக்கும் என்பதை அவர் தனது சமூக வலைதளப் பக்கத்தில் பதிவிட்டிருந்த நிலையில் அந்த உணவைச் சாப்பிட்ட சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் நட்சத்திர வீரர் ஹென்ரிச் கிளாசன் கடும் சிரமத்திற்கு உள்ளாகியுள்ளார்.

 

இஷான் கிஷனுடன் இணைந்து காரமான ஹைதராபாத் பிரியாணியைச் சாப்பிட்ட கிளாசனுக்கு அதன் காரம் தாங்க முடியாமல் உடல் முழுவதும் வேர்த்து கொட்டியதுடன் அவர் தனது கைக்குட்டையால் வியர்வையைத் துடைக்கும் காட்சிகள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.

இந்த நடப்பு தொடரில் ஹைதராபாத் அணிக்காக அதிக ரன்கள் குவித்த வீரராகத் திகழும் கிளாசன் மூன்று போட்டிகளில் 145 ரன்கள் எடுத்துள்ள போதிலும் மைதானத்திற்கு வெளியே இந்த காரமான உணவைச் சமாளிக்க முடியாமல் திணறியது ரசிகர்களிடையே சிரிப்பை ஏற்படுத்தியுள்ளது.

© Copyright @2026 LIDEA. All Rights Reserved.