உத்தரப்பிரதேச மாநிலம் கோரக்பூரை சேர்ந்த திவ்யா சிங் என்ற இளம் பெண், காத்மாண்டுவிலிருந்து எவரெஸ்ட் எவரெஸ்ட் பேஸ் கேம்ப் வரை சைக்கிள் பயணம் மேற்கொண்டு சாதனை படைத்துள்ளார்.
சுமார் 14 நாட்கள் நீடித்த இந்த பயணத்தில், நாளொன்றுக்கு 10 முதல் 12 மணிநேரம் வரை செங்குத்தான மலைப்பாதைகள், கற்கள் நிறைந்த தடங்கள் மற்றும் கடும் குளிரை எதிர்த்து அவர் சைக்கிள் ஓட்டியுள்ளார்.
உயரம் அதிகரிக்க ஆக்சிஜன் அளவு குறைந்த போதிலும், மன உறுதியுடன் தனது இலக்கை நோக்கி நகர்ந்த திவ்யா, சைக்கிள் ஓட்ட முடியாத கரடுமுரடான இடங்களில் தனது சைக்கிளை தோளில் சுமந்து சென்றுள்ளார்.
எவரெஸ்ட் சிகரத்தின் பின்னணியில் இந்திய தேசிய கொடியை ஏந்தியபடி அவர் நிற்கும் புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றன. எவ்வித பெரிய கார்ப்பரேட் ஸ்பான்சர்களும் இன்றி, தனது சுய முயற்சியாலும் பயிற்சியாலும் திவ்யா நிகழ்த்தியுள்ள இந்த சாதனை, பெண்களுக்கு பெரும் ஊக்கமளிப்பதாக அமைந்துள்ளது. அவரது இந்த அசாத்திய துணிச்சலை மாவட்ட அதிகாரிகள் மற்றும் பொதுமக்கள் பாராட்டி வருகின்றனர்.
Edited by Siva