மது விற்பனைக்கு தடை.. எந்தெந்த தேதிகள்? தமிழக அரசு வெளியிட்ட அதிரடி உத்தரவு.. முழு விவரம் உள்ளே..!!
SeithiSolai Tamil April 08, 2026 12:48 PM

தமிழக சட்டசபை தேர்தல் வரும் 23-ம் தேதி நடைபெற உள்ளதால், மாநிலம் முழுவதும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன. தேர்தலை ஒட்டி பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில், தமிழகத்தில் மொத்தம் நான்கு நாட்களுக்கு டாஸ்மாக் மதுக்கடைகளை மூட அரசு அதிரடியாக உத்தரவிட்டுள்ளது.

அதன்படி, வாக்குப்பதிவு நடைபெறுவதற்கு இரண்டு நாட்களுக்கு முன்னதாக, அதாவது ஏப்ரல் 21-ம் தேதி முதல் தேர்தல் நடக்கும் ஏப்ரல் 23-ம் தேதி வரை தொடர்ந்து மூன்று நாட்கள் மதுக்கடைகள் மூடப்பட்டிருக்கும்.

அதேபோல், வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும் மே மாதம் 4-ம் தேதியும் மதுக்கடைகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இந்த நான்கு நாட்களும் மது விற்பனைக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

© Copyright @2026 LIDEA. All Rights Reserved.