நீ உன்னோட கிட்னியை குடு இல்லனா ரூ.30 லட்சம் பணம் கொடு..! “கணவன் மனைவிக்கு இடையே படுத்து தூங்கும் மாமியார்”… குடும்பமே சேர்ந்து மூடி மறைத்த பகீர் உண்மை… பெண் கதறல்..!!
SeithiSolai Tamil April 08, 2026 02:48 PM

உத்தரப் பிரதேச மாநிலம் கான்பூரில், திருமணமான சில மாதங்களிலேயே கணவருக்கு சிறுநீரக தானம் செய்யக் கோரியும் அல்லது ரூ. 30 லட்சம் வரதட்சணை கேட்டுத் துன்புறுத்தியதாகவும் கணவர் மற்றும் புகுந்த வீட்டார் மீது இளம்பெண் ஒருவர் அளித்துள்ள புகார் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கான்பூரைச் சேர்ந்த இளம்பெண்ணுக்கும், லக்னோவைச் சேர்ந்த நிஷாந்த் குமார் என்பவருக்கும் கடந்த 2023, ஜூன் 22-ஆம் தேதி திருமணம் நடைபெற்றுள்ளது. திருமணத்தின் போது பெண்ணின் குடும்பத்தினர் சார்பில் பெருமளவிலான தங்க நகைகள், ரூ. 8 லட்சம் ரொக்கம் மற்றும் ஒரு ‘மஹிந்திரா தார்’ சொகுசு கார் ஆகியவை வரதட்சணையாக வழங்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. திருமணம் முடிந்து புகுந்த வீட்டிற்குச் சென்ற சில நாட்களிலேயே அப்பெண்ணிற்குப் பல்வேறு கசப்பான அனுபவங்கள் ஏற்பட்டுள்ளன. இது குறித்து அவர் அளித்துள்ள புகாரில் கூறியிருப்பதாவது, கணவர் தன்னுடன் நெருக்கமாக இருக்க ஆர்வம் காட்டவில்லை. கணவன்-மனைவிக்கு இடையே மாமியார் படுத்து உறங்குவதை வழக்கமாகக் கொண்டிருந்தார்.

மாமனார் அனுமதி இன்றி அறைக்குள் நுழைந்து, தனது சம்மதமின்றி ஆபாசமாகப் புகைப்படங்கள் எடுத்துத் தொல்லை கொடுத்தார். கணவருக்குத் திருமணத்திற்கு முன்பே கள்ளத்தொடர்பு இருந்ததும், அவர் போதைப் பழக்கத்திற்கு அடிமையானவர் என்பதும் பின்னாளில் தெரியவந்தது. கடந்த ஏப்ரல் மாதம் வீட்டில் இருந்த மருத்துவ ஆவணங்களைச் சோதித்தபோது, தனது கணவருக்கு 2022-ஆம் ஆண்டிலிருந்தே சிறுநீரகப் பாதிப்பு இருப்பதும், அவர் ‘டயாலிசிஸ்’ சிகிச்சையில் இருப்பதும் அந்தப் பெண்ணிற்குத் தெரியவந்தது.

இந்த உண்மையை மறைத்துத் திருமணம் செய்ததைக் கண்டித்தபோது, “ஒன்று உன் சிறுநீரகத்தை தானமாகக் கொடு அல்லது மாற்று அறுவை சிகிச்சைக்காக உன் வீட்டிலிருந்து ரூ. 30 லட்சம் வாங்கி வா” என்று கூறி கணவர் தரப்பினர் சித்திரவதை செய்ததாக அப்பெண் குற்றம் சாட்டியுள்ளார். புகுந்த வீட்டில் இருக்க முடியாமல் கடந்த அக்டோபர் மாதம் தாய் வீட்டிற்குத் திரும்பிய அந்தப் பெண், கான்பூர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இந்தப் புகாரின் அடிப்படையில் நிஷாந்த் குமார் மற்றும் அவரது குடும்பத்தினர் மீது வரதட்சணை கொடுமை, மோசடி, பெண்ணைத் துன்புறுத்துதல் ஆகிய பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். இது குறித்து உயர் போலீஸ் அதிகாரி அபிஷேக் பாண்டே கூறுகையில், “வழக்குப் பதிவு செய்யப்பட்டுத் தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது; விரைவில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும்” எனத் தெரிவித்தார்.

© Copyright @2026 LIDEA. All Rights Reserved.