9 மணி நேரம்..! என் வேலைக்கு ஆப்பு வச்சிறாத… நானே கல்யாணம் பண்ணி வைக்கிறேன்… மின் கோபுரத்தில் ஏறிய பெண்ணை சமாதானம் செய்த போலீஸ்… வீடியோ வைரல்..!!
SeithiSolai Tamil April 08, 2026 04:48 PM

பீகார் மாநிலம் வைஷாலி மாவட்டத்தில், தன்னைத் திருமணம் செய்துகொள்ள மறுத்த காதலனால், 100 அடி உயர உயர்மின் அழுத்த மின்சாரக் கோபுரத்தில் ஏறி இளம்பெண் ஒருவர் தற்கொலை மிரட்டல் விடுத்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

வைஷாலி மாவட்டம் மஹ்னார் பகுதியைச் சேர்ந்த அந்த இளம்பெண், ஒரு வாலிபரைக் காதலித்து வந்துள்ளார். ஆனால், அந்த வாலிபர் அவரைத் திருமணம் செய்ய மறுத்ததாகக் கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த இளம்பெண், சுமார் 1.32 லட்சம் வோல்ட் மின்சாரம் பாயும் உயர்மின் கோபுரத்தின் உச்சிக்குத் தனது மொபைல் போனுடன் ஏறினார். அங்கிருந்து கீழே குதித்துத் தற்கொலை செய்துகொள்ளப் போவதாக மிரட்டல் விடுத்தார்.

இளம்பெண் கோபுரத்தில் ஏறியதைக் கண்டு அதிர்ச்சியடைந்த பொதுமக்கள் உடனடியாகக் காவல்துறையினருக்குத் தகவல் தெரிவித்தனர். விபரீதம் ஏதும் நடப்பதைத் தவிர்க்க, மின்சார வாரியத்தைத் தொடர்பு கொண்டு அந்தப் பகுதிக்கான மின் விநியோகம் உடனடியாகத் துண்டிக்கப்பட்டது. சுமார் 9 மணி நேரத்திற்கும் மேலாக இந்தப் போராட்டம் நீடித்தது.

 

 

 

View this post on Instagram

 

A post shared by NDTV India (@ndtvindia)