ஈரான் நாட்டின் மீது அமெரிக்கா தொடுத்த போர் 2 வாரத்திற்கு நிறுத்தி வைக்கப்பட்டிருப்பதாக அறிவிக்கப்பட்டிருக்கிறது. பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஷ் ஷெரிப் நடத்திய பேச்சுவார்த்தையில் இந்த உடன்பாடு எட்டப்படிருக்கிறது. ஈரானை அமெரிக்காவும், இஸ்ரேலும் தாக்கியதால் ஈரான் நாடு வளைகுடா நாடுகளை தாக்கியது. அதோடு இந்தியா உள்ளிட்ட பல நாடுகளுக்கும் வளைகுடா நாடுகளில் இருந்து வரும் எண்ணெய் கப்பல்கள் ஈரானின் கடல் வழியான ஹார்மூஸ் ஜலசந்தியை ஈரான் மூடிவிட இந்தியா உள்ளிட்ட பல நாடுகளுக்கும் கச்சா எண்ணெய் செல்வது தடைபட்டது.
இதன் காரணமாக, இந்தியா உள்ளிட்ட பல நாடுகளிலும் எரிபொருள் கிடைக்கவில்லை. அதனால், இந்தியாவில் தமிழ்நாடு உள்ளிட்ட பல மாநிலங்களிலும் பெட்ரோல், டீசல் விலைகளை தனியார் பெட்ரோல் நிறுவனங்கள் உயர்த்தியது. அதோடு, ஹோட்டல்களில் பயன்படுத்தப்படும் சமையல் சிலிண்டர் கிடைக்கவில்லை. அதனால், அதை நம்பியிருந்த பல ஹோட்டல்கள் மூடப்பட்டன. ஒருபக்கம், டீ, காபி உள்ளிட்ட உணவுப்பொருட்களின் விலையும் உயர்ந்தது.
ஹார்மோஸ் ஜலசந்தியை உடனடியாக திறக்கும் நிபந்தனையுடன் ஈரான் மீதான தாக்குதலை இரண்டு வாரங்கள் நிறுத்துவதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் சம்மதித்துள்ளார். இதையடுத்து, ஒரு மாதத்திற்கு மேல் நடந்து வந்த போர் தற்போது முடிவுக்கு வந்திருக்கிறது. அதோடு, வருகிற 10ம்தேதி பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்தில் ஈரானுக்கும், அமெரிக்காவுக்கும் இடையே பேச்சுவார்த்தை நடைபெறவுள்ளது.
இந்நிலையில், போர் 2 வாரத்திற்கு நிறுத்தப்பட்டிருப்பதால் சந்தையில் கச்சா எண்ணெய் விலை குறைந்துள்ளது. ஒரு பேரல் 119 டாலருக்கு விற்கப்பட்டுவந்த நிலையில் தற்போது 20 சதவீதம் குறைந்து 100 டாலராக குறைந்திருக்கிறது. இதன் காரணமாக இந்தியா உள்ளிட்ட பல நாடுகளிலும் எரிபொருள் விலை குறையும் என்பதால் கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு முடிவுக்கு வரும் என நம்பப்படுகிறது.