அரசியலில் விஜய் எலியா, புலியா? டிஆர். சொன்னது எல்லாமே நெத்தியடிதான்!
CineReporters Tamil April 08, 2026 12:48 PM

தமிழ்சினிமா உலகில் இளையதளபதி என்ற பட்டத்துடன் சினிமாவில் அடி எடுத்து வைத்தார் விஜய். அப்புறம் தளபதி ஆனார். ரஜினிக்கே டஃப் கொடுக்கும் வகையில் சினிமாவில் வசூல் மன்னன் ஆனார். அவரது பெரும்பாலான படங்கள் வெற்றி வாகை சூடின. Rs.200 கோடி சம்பளம் வாங்கி வந்த சூழலில் யாரும் எதிர்பார்க்காத வகையில் இதுதான் எனது கடைசி படம்னு ஜனநாயகனை அறிவித்தார்.

அப்புறம் அரசியலில் முழுமையாக இறங்கினார். இப்போது வரும் சட்டமன்ற தேர்தலில் ஆட்சியைப் பிடிப்பதே தனது குறியாகக் கொண்டு பிரச்சார மேடைகளில் முழக்கம் இட்டு வருகிறார். இவரது சினிமா மற்றும் அரசியல் வருகை குறித்து பிரபல நடிகரும், இயக்குனருமான டி.ராஜேந்தர் என்ன சொல்கிறார்னு பாருங்க.

இதான் என்னோட கேள்வி. அவரு சினிமா உலகத்துல அடி எடுத்து வச்ச உடனே ரத்தின கம்பளம் போட்டு சினிமா உலகம் அவரை வரவேற்றுச்சா? அன்னைக்கே இளையதளபதின்னு பட்டம் கொடுத்து இளைய தளபதி நீதான் கலை உலகத்துக்கு இனி அதிபதி அப்படின்னு ஏதாவது புகழ்மாலை சூட்டுனுச்சா?

சூட்டலையே… எவ்வளவு எல்லாம் தூற்றி இருப்பாங்க. தூற்றுனதை எல்லாம் மீறி அவர்களையே போற்ற வைக்கக்கூடிய அளவுக்கு இன்னைக்கு புகழ் ஏணியின் உச்சியில் ஏறி நின்னு கலை உலகத்தில் ஒரு தனிக்கொடியைப் பிடிச்சிக் காமிச்சாரே…

அவர் கலை உலகத்துல புலி இல்லையா? இன்னொன்னு. அரசியல்ல அவர் புலியா, எலியான்னு கேட்டா எனக்கு சொல்லத் தெரியல. ஆனா சில அரசியல் கட்சிகளோட வயித்துல அவர் புளியைக் கரைச்சிட்டாருங்கறது மட்டும் உண்மை. இவருடைய பேச்சுக்கு ஆதரவாக கமெண்ட்கள் குவிந்து வருகின்றன. டி.ராஜேந்தரும் ஒரு காலகட்டத்தில் அரசியல் இருந்தவர் தான். ஆனாலும் அவரால் பெரிய அளவில் சோபிக்க முடியவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

© Copyright @2026 LIDEA. All Rights Reserved.