போர் நிறுத்தம் அமல்; கச்சா எண்ணெய் விலை 18 சதவீதம் சரிவு..!!
Top Tamil News April 08, 2026 01:48 PM

ஹார்முஸ் ஜலசந்தியில் கப்பல் போக்குவரத்து சுமுகமாக நடைபெற்றால் ஈரான் மற்றும் அமெரிக்கா இடையே இருவாரங்களுக்கு போர்நிறுத்தம் என டிரம்ப் அறிவித்தார்.

பேச்சுவார்த்தைகளுக்காக ஈரான் முன்வைத்த 10 கோரிக்கைகளை அமெரிக்க அதிபர் அதிபர் டிரம்ப் ஏற்றுக்கொண்டார். ஈரானும் போர் நிறுத்தத்திற்கு சம்மதம் தெரிவித்துள்ளது.

ஹார்முஸ் ஜலசந்தி வழியாக அனைத்து நாட்டின் கப்பல்களும் பயணிக்க அனுமதிப்பதாக ஈரான் தெரிவித்துள்ளது. ஈரான் மீதான தாக்குதல்கள் நிறுத்தப்பட்டால், நமது சக்திவாய்ந்த ஆயுதப் படைகள் தற்காப்பு நடவடிக்கைகளை நிறுத்திவிடும் என்று ஈரான் வெளியுறவுத்துறை அமைச்சர் அப்பாஸ் அராக்சி தெரிவித்தார்.

அவர், ''ஈரான் ஆயுதப் படைகளுடன் ஒருங்கிணைந்து செயல்படுவதன் மூலமும், தொழில்நுட்ப வரம்புகளைக் கருத்தில் கொண்டும், ஹார்முஸ் ஜலசந்தி வழியாக இரண்டு வாரங்களுக்குப் பாதுகாப்பான போக்குவரத்து சாத்தியமாகும், என்றார். இடைக்கால போர் நிறுத்தம் செய்ய உதவியதற்காக பாகிஸ்தானுக்கு ஈரான் நன்றி தெரிவித்துள்ள நிலையில், நிரந்தர போர் நிறுத்தத்திற்கான அமைதி பேச்சுவார்த்தை வரும் ஏப்ரல் 10ம் தேதி இஸ்லாமாபாத்தில் பாகிஸ்தான் ஏற்பாடு செய்துள்ளது.

ஈரான் மற்றும் அமெரிக்கா இடையே இரண்டு வாரங்களுக்கு போர்நிறுத்த அறிவிப்பு எதிரொலியாக, 109 டாலரில் தொடங்கிய ஒரு பேரல் கச்சா எண்ணெய் விலை 91 டாலர்கள் வரை சரிந்தது. கச்சா எண்ணெய் விலை 18 சதவீதம் வரை சரிந்துள்ளது. இதனால் எண்ணெய் நிறுவனங்களுக்கு சற்று நிம்மதி அளித்துள்ளது.

© Copyright @2026 LIDEA. All Rights Reserved.