உத்தரப் பிரதேச மாநிலம் பாந்தா மாவட்டத்தில், கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்த கணவனை, மனைவியும் அவரது தம்பியும் சேர்ந்து கொலை செய்த அதிர்ச்சிச் சம்பவம் நடந்துள்ளது. சோனு என்ற இளைஞர் நிஷா என்பவரை ஒன்றரை ஆண்டுகளுக்கு முன்பு காதலித்து திருமணம் செய்துகொண்டார்.
வேலைக்காக சோனு வெளியூர் சென்றிருந்த நேரத்தில், அவரது தம்பி மோனுவுக்கும் நிஷாவுக்கும் இடையே கள்ளக்காதல் ஏற்பட்டுள்ளது. சோனு ஊருக்குத் திரும்பி இவர்களின் உறவைக் கண்டித்ததால், ஆத்திரமடைந்த இருவரும் சேர்ந்து சோனுவைத் தூக்கத்திலேயே கழுத்தை நெரித்துக் கொலை செய்துள்ளனர்.
முதலில் சோனு பாம்பு கடித்து இறந்ததாக நிஷா நாடகமாடினார். ஆனால், உடற்கூறாய்வு அறிக்கையில் அவர் கழுத்து நெரிக்கப்பட்டு கொல்லப்பட்டது உறுதியானதால் போலீசாருக்கு சந்தேகம் ஏற்பட்டது. காவல்துறையினர் பாணியில் விசாரித்தபோது, நிஷா தனது கொழுந்தனுடன் சேர்ந்து கணவனைக் கொன்றதை ஒப்புக்கொண்டார்.
ஒரு மகன் கொல்லப்பட, இன்னொரு மகன் சிறைக்குச் சென்றதைக் கண்டு அவர்களின் வயதான தாய் கதறி அழுவது அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தற்போது நிஷாவும் மோனுவும் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.