19-வது ஐபிஎல் கிரிக்கெட் தொடர் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில் 03 போட்டிகளில் விளாடிய சென்னை அணி, தொடர் தோல்விகளை சந்தித்து புள்ளி பட்டியலில் 10 வது இடத்தில் உளது. இந்நிலையில், முதல் வெற்றியை நோக்கி வரும் 11-ஆம் தேதி டெல்லி கேப்பிடல்ஸ் அணியை சென்னை சேப்பாக்கத்தில் எதிர்கொள்ளவுள்ளது.
கடந்த மூன்று போட்டியிலும் காயம் காரணமாக சிஎஸ்கேவின் அதிரடி வீரர் டெவால்ட் பிரெவிஸ் விளையாடவில்லை. இந்நிலையில் டெல்லி அணிக்கான போட்டியில் களம்காண வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்நிலையில், சென்னையில் நடைபெற்ற தனியார் நிகழ்வு ஒன்றில் பிரெவிஸ் பங்கேற்று பேசினார். அப்போது, ''ஏப்.11-ம் தேதி உங்களை சந்திக்க ஆவலோடு காத்திருக்கிறேன'' என்று குறிப்பிட்டுள்ளார். சிஎஸ்கே அணிக்காக இந்த சீசனில் களம் காண உள்ளதையே கூறியுள்ளதாக பார்க்கப்பட்டாலும், அன்றைய நாள் போட்டியில் ஆடும் லெவனில் அவர் இடம்பிடித்தால் மட்டுமே அது உறுதியாகும்.
அணியின் மிடில் ஆர்டரில் இறங்கி அதிரடியாக ஆடி எதிரணியை அவர் மிரட்ட கூடிய இவர், அவரது வரவு தொடர் தோல்விகளால் துவண்டு போயுள்ள சிஎஸ்கே அணிக்கு ஒரு வெற்றிக்கு வழி வகுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.