பொதுவாக இயற்கை ஒவ்வொரு காய்க்குள்ளும் ஒவ்வொரு விதமான ஆரோக்கியத்தை ஒளித்து வைத்துள்ளது .அதை நம் முன்னோர்கள் கண்டறிந்து அந்தந்த சீசனில் விளையும் காய் மற்றும் பழங்களை உண்டு அவர்களின் ஆரோக்கியத்தை மேம்படுத்தி நோயின்றி வாழ்ந்து வந்தனர் .ஆனால் இந்த தலை முறை அதை மறந்து துரித உணவுக்கு அடிமையாகி நோய்களை வரவைத்து கொள்கின்றனர் .அந்த வகையில் நெல்லிக்காயில் இருக்கும் ஆரோக்கிய நன்மை பற்றி இந்த ப்பதிவில் பார்க்கலாம்
1. விட்டமின் மாத்திரைக்கு பதில் நெல்லி சாப்பிடலாம் ,ஏனெனில் நெல்லிக்காயில் வைட்டமின் சி, கால்சியம், மற்றும் கார்போஹைட்ரேட் போன்றவைகள் வளமாக நிறைந்துள்ளது.
2.ஏனெனில் நெல்லிக்காய் உடலில் புரோட்டீன்களின் அளவை அதிகரித்து, கொழுப்புக்களைக் குறைத்து, உடல் பருமனை தடுக்கும். இதன் மூலம் உடல் பருமனை கூட குறைக்கலாம்
3. உடல் எடையைக் குறைக்க தினமும் காலையில் வெறும் வயிற்றில் ஒரு டம்ளர் நெல்லிக்காய் ஜூஸை குடித்து வந்தால் போதும் உடல் எடை குறையும் .
4.நெல்லிக்காய் உடலில் உள்ள நச்சுக்கள் என்ற டாக்ஸின்களை முழுமையாக வெளியேற்றி விடும் , மேலும் உடலையும், இரத்தத்தையும் சுத்தம் செய்யும்.
5.அதனால் நெல்லிக்காய் ஜூஸ் குடித்தால் இரத்தணுக்களின் அளவு அதிகரிக்கும்.
6.நெல்லிக்காயில் நார்ச்சத்து அதிகமாக இருப்பதால் மலச்சிக்கல் உள்ளவர்களுக்கு இது தீர்வாக அமைகிறது.
7. சிலர் கேன்சர் வருமோ என்று அஞ்சிக்கொண்டிருப்பர் .புற்றுநோய் வராமலிருக்க வேண்டுமானால், நெல்லிக்காய் ஜூஸை பருகுங்கள்.
8.நெல்லிக்காயில் உடலை குளிர்ச்சியுடன் வைத்துக் கொள்ளும். குறிப்பாக கோடையில் நெல்லிக்காய் ஜூஸ் குடிப்பது, உடல் சூட்டைத் தணிக்கும்
9.நெல்லிக்காயில் உள்ள ஆன்டி-ஆக்ஸிடன்ட், கண்களின் ரெட்டினாவை பாதுகாக்கும்.
10.நெல்லிக்காய் ஜூஸ் குடித்தால் பார்வை மேம்படுவதோடு, கண்களில் இருந்து தண்ணீர் வருவது நிற்கும் ,
11.நெல்லிக்காய் ஜூஸ் குடித்தால் கண் எரிச்சல், கண்கள் சிவப்பது போன்றவை தடுக்கப்படும்.