மீண்டும் இணையும் 'பிரேமம்' இயக்குனர் - நிவின் பாலி கூட்டணி..!
Seithipunal Tamil April 09, 2026 06:48 AM

கடந்த 2013-ஆம் ஆண்டு வெளியான 'நேரம்' படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானவர் அல்போன்ஸ் புத்திரன். இந்தப் படத்தை தொடர்ந்து 'பிரேமம்' திரைப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இந்த படம் தென்னிந்திய அளவில் கவனம் ஈர்த்தது. நிவின் பாலி, சாய் பல்லவி நடித்த இந்தப் படம் க்ளாசிக் படமாக கொண்டாடப்பட்டது.

இதனையடுத்து, அல்போன்ஸ் புத்திரன் இயக்கிய 'கோல்டு' படத்தில் பிருத்விராஜ் - நயன்தாரா நடித்திருந்தனர். ஆனால், இந்தப் படம் எதிர்மறை விமர்சனங்களைப் பெற்று தோல்வி அடைந்தது. இதன் பிறகு நிவின் பாலி நடிப்பில் வெளியான 'சர்வம் தாளமயம்', 'வாழ 2' என மலையாள படங்களில் அல்போன்ஸ் புத்திரன் நடித்துள்ளார்.

தொடர்ந்து, இளையராஜா இசையில் 'கிப்ட்' என்று படத்தை இயக்குவதாக இருந்த நிலையில், அது குறித்து எந்த அப்டேட்டும் வெளியாகவில்லை. இந்நிலையில், தற்போது அவர் 'பிரேமம்' படத்துக்குப் பிறகு நிவின் பாலியை வைத்து புதிய படம் இயக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்தப் படத்தின் படப்பிடிப்பு இந்த ஆண்டு இறுதியில் தொடங்கும் என கூறப்படுகிறது.

© Copyright @2026 LIDEA. All Rights Reserved.